துப்புரவுப் பணியாளர்களுக்கு பரிசு தந்த ‘போக்கிரி ராஜா’

pok 6 பி டி எஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக,  புலி படத்தை தயாரித்த பி.டி. செல்வகுமார் வழங்க, டி. எஸ். பொன் செலவி தயாரிக்க…

ஜீவா, சிபிராஜ் , ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் ,  தமிழுக்கு எண் 1 படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் போக்கி ராஜா . (ரஜினி, ராதா , ராதிகா நடிக்க ஏ வி எம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கியது முதல் போக்கிரி ராஜா )

டி இமான் இசை அமைக்க, படத்துக்கு  ஒளிப்பதிவு செய்யும் ஆஞ்சநேயலு ராம் கோபால் வர்மாவுடன் பல படங்களில் பணியாற்றியவர். 
pok 7
அண்மையில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிவாரணம் வழங்கினார்கள் . அதன் பிறகு சென்னை நகரை தூய்மைப் படுத்தும் பணி மிக அவசியமான ஒன்றாக ஆனது . இந்த  துப்புரவுப் பணியாளர்களின் சேவை நிவாரண உதவி செய்தவர்களின் சேவைக்கு இணையானதே . 
இதை உணர்ந்த பி டி  செல்வகுமார் , துப்புரவுப் பணியில் ஈடுபடும் நூறு பேருக்கு புத்தாண்டை முன்னிட்டு வேட்டி, புடவை , பெட் ஷீட், அரிசி ஆகிய பொருட்களை , போக்கிரி ராஜா படப்பிடிப்பில்  சிபிராஜ், ஜீவா, மற்றும் ஹன்சிகா கையால் வழங்கச் செய்தார் . 
“வெள்ளம் சமயத்தில் சென்னையில் செய்யப்பட மனித நேர நிவாரணப் பணிகள் சென்னைக்கே மிகுந்த கவுரவத்தைக் கொடுத்தன . அதன் தொடர்ச்சியாக இதை செய்வதில் மிக்க மகிழ்ச்சி . எனக்கு ராம் பிரகாஷ் ராயப்பாவின் முதல் படமான தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படம் ரொம்ப பிடித்தது .
pok 3
அவர் வந்து கதை சொன்ன போது சிரித்துக் கொண்டே இருந்தேன். ஒரு தோல்வியில் இருந்த எனக்கு எனர்ஜி ஊட்டும் படமாக இது இருக்கும் ” என்றார்  ஜீவா 
சிபிராஜ் பேசும்போது ” நான் அறிமுகமான ஸ்டூடன்ட் நம்பர் 1 படம் வந்த அதே சமயத்தில்தான் ஜீவா அறிமுகமான  ஆசையாய் ஆசையாய் படமும் வெளியானது. அப்போது முதலே நாங்கள் ‘மாமா.. மச்சான்’ என்று உரிமை கொண்டாடும் நண்பர்கள். நாங்கள் சேர்ந்து இந்தப் படத்தில் நடிப்பது ரொம்ப சந்தோசம் . கூடவே ஹன்சிகா வேறு . படம் மிக சிறப்பாக வந்து கொண்டு இருக்கிறது ” என்றார் . 
” துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாண்டுப் பரிசு கொடுக்க நான் விரும்புவதை  சொன்னதும் தங்கள் கையால் கொடுக்க எல்லோரும் சம்மதித்தார்கள்.  அவர்களுக்கு நன்றி.  
pok 2
படத்தை மிக சிறப்பாக உருவாக்கி வருகிறார்கள் . அதற்கும் நன்றி. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியும் . விரைவில் படம் திரைக்கு வரும் ” என்றார்  பி டி செல்வகுமார் 
இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசிய போது ” துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவும்  நல்ல விஷயத்தை இந்தப் படத்தின் படப்பிடிப்பில் செய்வது ரொம்பப் பொருத்தம். காரணம் இந்தப் படத்தில் காமெடி , காதல் , ஆக்ஷன் சென்ட்மென்ட் எல்லாம் இருக்கும் அதே நேரம் ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது .
அந்த மேசேஜையும் கதாநாயகியின் கேரக்டர் மூலம் சொல்கிறேன் . கதையை நான் ஹன்சிகாவிடம் சொன்ன போது மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டார். குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல நல்ல காரியங்களை செய்பவராச்சே அவர் . 
pok 1
எனது முந்தைய படம் போலவே இந்தப் படத்திலும் ஜீவா , சிபிராஜ் என்று ரெண்டு ஹீரோக்கள். இருவருக்கும் இடையில் உள்ள நிஜமான நட்பு எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது . படம் மிக நன்றாக வந்திருக்கிறது ” என்றார் . 
வெற்றிக்கு வாழ்த்துகள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →