தமிழுக்கு வரும் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் ‘ இந்திப் பட நிறுவனம்,

kolai 2
இந்தித்  திரையுலகில் தயாரிப்புத்  துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் நிறுவனம்,

தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு,  தமிழில் உன்னை போல் ஒருவன் மற்றும் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி .

இந்தியில் வெளியான  ‘கூலி நம்பர் 1’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திற்கு இந்த ‘கொலையுதிர் காலம் 31 வது படம்.

இது பற்றி பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர் வாசு பக்னானி. “வெகுகாலமாக தமிழ் நாட்டில் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ஆடைகள் துறையில் வியாபாரம் செய்து வருபவன் நான் .

kolai 1

அப்போது ஒரு முறை தமிழ் நாட்டில் நான் இருந்த போது சின்ன மாப்ளே என்ற படம் பார்த்தேன்  அந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது . நான் சினிமா தயாரிப்பாளராக முடிவு செய்தேன் 

சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம்தான்.

( அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க, கலைமணியின் கதை கிரேசி மோகனின் வசனத்தில் பிரபு , விசு, சுகன்யா , சிவரஞ்சனி நடிக்க, சந்தான பாரதி இயக்கிய படம் அது )

அந்த படத்தை ஹிந்தியில் நான் ‘கூலி நம்பர் 1’ என்ற தலைப்பில்  ரீமேக் செய்தேன். படம் சூப்பர் ஹிட் . பிறகு பல படங்கள். சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்தேன்

எங்கள்   ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது முதல் முறையாக கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.

kolai 3

நான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்திப் பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை, அவ்வளவு திறமையானவர் அவர்.

தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது. 

தென்னிந்திய திரையுலகில்   அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, தயாரிப்பு  மற்றும் விநியோக துறையில் நாங்கள் ஈடுபட இருக்கின்றோம்.” என்கிறார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *