சுரேஷ் புரடக்சன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுனில் நரங் , சுரேஷ் பாபு, புஸ்கூர் ராம் தயாரிக்க, சிவ கார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா , சத்யராஜ் நடிப்பில் அனுதீப் இயக்கி இருக்கும் படம்.
பாண்டிச்சேரி வாழ் இளைஞன் (சிவகார்த்திகேயன்) ஒருவனுக்கும் அங்கு வாழும் இங்கிலாந்துப் பெண்ணுக்கும் (மரியா ரியாபோஷப்கா) காதல் வருகிறது .
நாயகனின் –சாதி மத வேறுபாடு பார்க்காத – அப்பா இந்தக் காதலை மட்டும் ஏற்க மறுக்கிறார் .
காரணம் அவரது (ஹீரோவின் தாத்தா) அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வெள்ளைக்காரனால் கொல்லப்பட்டவர் .
காதலியின் அப்பாவுக்கு பாண்டிச்சேரியில் பங்களா இருக்க, அதை அபகரிக்க நினைக்கும் ஒருவன் (பிரேம்ஜி) நாயகனின் அப்பாவின் தேச பக்தியை வைத்து அபகரிக்கப் பார்க்க, அது காதலில் சிக்கலை வளர்க்க அப்புறம் என்ன ஆனது என்பதே படம்
ஏனென்றால் இது முழுக்க முழுக்க காமெடி படம். அதுவும் சுள்ளான் கொசு கடிக்கிற மாதிரி நைஸ் காமெடி .
சிவகார்த்திகேயன் வழக்கம் போல. நடனத்தில் மெருகேற்றம் .
மரியா ஷரபோவா அழகு
தமனின் இசையில் பாடல்கள் ஹிட்
பாடல்கள் இனிமை .
மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு எழில் .
கடைசி பகுதியில் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார்கள் .