தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம் , தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் திரைப்பட பாதுகாப்புக் குழு…
திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெரும்பாலான ஊடகங்களை தவிர்த்தும் இணைய தளங்களை முற்றிலும் புறக்கணித்தும் இனி நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக…
நம்பிக்கையான வகையில் வந்த தகவலை அடுத்து , திரைப்பட நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக தமிழ் திரைப்பட ஊடகங்கள் சம்மேளனம் முடிவு செய்தது.
இரு தரப்பிலும் இது மேலும் மேலும் சங்கடங்களை தர , ஒரு நிலையில் இரண்டு தரப்பும் உட்கார்ந்து பேச முடிவு செய்து , அந்தக் கூட்டம் 25 ஆம் தேதி நடந்தது.
அதில்’இரு தரப்பிலும் நட்புதியான பேச்சுகள் ஆரோக்கியமாக நடந்தன .
அதன்படி இணைய தளங்களை பொறுத்தவரை மூத்த பத்திரிக்கையாளர்கள் , தொழில் ரீதியாக சிறப்பாக செயல்படும் ஊடகங்கள் , இவைகளுக்கு தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றும்….
சமூக இணைய தளங்களில் ஏதாவது பக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் படத்தைப் பற்றின் தவறாக எழுதுவோம் என்று தயாரிப்பாளர்களை மிரட்டி ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று பணம் பறிக்கும் நபர்களை மட்டுமே தவிர்க்க விரும்புகிறோம் என்றும் ….
இணைய தள ஊடகத்துறையில் முறைப்படி செயல்படும் புதியவர்களுக்கும கூட செய்திகளையும் புகைப்படங்களையும் தருவதில் ஆட்சேபனை இல்லை என்றும்..
திரைப்பட துறை சங்கங்களின் சார்பில் உறுதி தரப்பட்டது. அது பத்திரிக்கையாளர்கள் தரப்பிலும் ஏற்கப் பட்டது.
இது குறித்து இரு தரப்பும் மீண்டும் சந்தித்து பேசி திட்டமிடும் வரை எந்த ஊடகத்தையும் தடுப்பதில்லை என்று திரைத்துறையினர் சார்பில் அன்புடன் அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து திரைப்பட நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் முடிவையும் அது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஊடக சம்மேளனமும் திரும்பப் பெற்றது .
இரண்டு தரப்பிலும் புன்னகைகளுக்கு உயிர் வந்தன . கைகள் நட்புடன் குலுக்கப் பட்டன.
பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட பி ஆர். ஒ. சங்கத் தலைவர் முரளி, இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் , தயாரிப்பாளர் சங்கப் பிரமுகர்கள் திருவாளர்கள் கதிரேசன் , கே எஸ் சீனிவாசன், சத்யஜோதி தியாகராஜன் , டி.சிவா, ஏ.எல். அழகப்பன், ராதா கிருஷ்ணன் , தனஞ்செயன் ஆகியோருக்கு நன்றிகள்.
திரு. விக்ரமன் கூறியபடி , அழைப்பு வரும் பட்சத்தில், திருட்டு வி சி டி ஒழிப்பு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு கருத்துகள் கூறி ஆலோசனை தர, நாங்கள் தயாராகவே இருக்கிறோம் .
ஏனெனில் சினிமாத் தொழில் காக்கப்படவேண்டும் என்பதில் எங்கள் அக்கறையும் மிக வலுவானதே !