தப்பாட்டம் படத்தில் தப்பாட்டக் கலைஞனாக கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் .
அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு , உற்சாக முகம் , பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார் .
இது எந்த படத்துக்கு என்றால் ”ஒரு புதுப் படத்துக்கு ”என்கிறார் பளீர் சிரிப்போடு .
தஞ்சாவூர்க்காரரான பப்ளிக் ஸ்டாரின் அடிப்படை தொழில் ரியல் எஸ்டேட் . அதே நேரம் சினிமா ஆசை .
“இது வரை தப்பாட்டம் , ஜூலியும் நாலு பெரும் உட்பட பத்து படங்களில் நடித்து விட்டேன் . ரியல் எஸ்டேட் தொழிலும் சிறப்பாகப் போகிறது .
என்னை நடிக்க அழைப்பவர்கள் நான் நடித்தால் பொருளாதார உதவியும் கிடைக்கும் என்று நினைத்து வருகிறார்கள்.
அதற்காக எல்லா படங்களுக்கும் நான் அப்படி செய்ய முடியாது . நல்ல கதை நல்ல கதாபாத்திரம் இருந்தால்,
அந்தப் படத்துக்கு கை கொடுப்பது தவறு இல்லை என்று எண்ணுகிறேன் .
அதே நேரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு நடிகனாக நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறேன் ” என்கிறார் .
“பொதுவாக ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் படம் தயாரிக்கத்தான் வருவார்கள் ? நீங்கள் நடிக்க வந்தது எப்படி ?” என்று கேட்டதற்கு , ” நான் ரியல் எஸ்டேட்காரர் மட்டுமல்ல . ஒரு வழக்கறிஞரும் கூட. எனக்கு நடிப்பின் மீது ஆசை உண்டு .
அதே நேரம் நல்ல கதை திரைக்கதை , மக்கள் அறிந்த நடிகர்கள் , வியாபாரத்தை மீறி கையைக் கடிக்காத பட்ஜெட் இவற்றோடு நல்ல கதை அமைந்தால் ,
அப்படி என்னை கவரும் கதையும் வந்தால் படம் தயாரிக்கவும் தயார் . ஆனால் இந்த விசயத்தில் என்னை யாரும் ஏமாற்ற முடியாது ” என்கிறார்.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462