வள்ளியம்மாள் புரொடக்ஷன் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘புறநகர்’
கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவ கண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு – விஜய் திருமூலம்
பாடல்கள் – ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா
எடிட்டிங் – ஜெய்மோகன்
நடனம் – ரவிதேவ், சரண்பாஸ்கர், மெட்டிஒலி சாந்தி
இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் “ எல்லாளன் “ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ” இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி இருக்கார் . இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது.
நடிகர்கள் எவ்வளவு வேண்டும் ஆனாலும் என்று வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் அதில் பாதியை கஷ்டப்படும் மக்களுக்குச் செலவு செய்யுங்கள். அந்த மக்கள் தானே உங்களுக்கு பணம் தருகிறார்கள். உச்ச நடிகர்களில் இருந்து எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
புறநகர் படத்தின் பாடல்கள் என்னை பிரம்பிக்க வைத்துவிட்டது. ரஜினி முதலில் அறிமுகமானது சின்னப்படம் தான். அஜித்தும் அப்படித் தான். எங்கள் பாக்கியராஜும் அப்படி படிப்படியாக ஏறித்தான் மேல் வருகிறார்கள். சோழா பொன்னுரங்கம் தான் அஜித்தை ஹீரோவாக்கினார். ஆனால் அவர் கஷ்டப்படுகிறார். அஜித் இப்போது ஸ்ரீதேவி புருசன் கஷ்டப்படுகிறார் என்று படம் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்களை முதல் முதலில் ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள். ரஜினிகாந்த் பாண்டியன் படத்தை அப்படித்தான் பண்ணிக் கொடுத்தார்.
தருண்கோபி, “தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். சினிமா என்னும் இந்த ஊடகத்தை தப்பா பயன்படுத்தி படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா செருப்பால அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாம தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சிலபேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்
கே.பாக்கியராஜ் தனது பேச்சில், ” “தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமா டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் மின்னல் முருகன் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால் டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.
நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில் ஒருகாலத்தில் தனி க்ளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. ஒரு கை ஓசை என்ற படத்தில் இந்த விசயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில் “இந்த படத்தை தயாரித்து நடித்த தம்பி கமல் கோவின் ராஜ், முதல்படம் போல இல்லாமல் கலக்கி இருக்கிறார். தம்பி மின்னல் முருகன் ஸ்டண்ட் மாஸ்டர். அவர் பிரபுதேவா, லாரன்ஸ் போல வித்தியாசமான இயக்குநராக கவனிக்கப்படுவார். புது முகங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சரியான இசை மற்றும் ஒளிப்பதிவு கொடுத்துள்ளார்கள்.
தனது இயக்குநர்களை மரியாதை கொடுத்த கலாச்சாரம் ஒன்றுண்டு. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது கூட தனது இயக்குநர்களை மதித்தார். எம்.ஜி. ஆர் நடிக்கும் போது சம்பாதித்தது மட்டும் தான். அரசியலுக்கு வந்த பிறகு அவர் எதுவுமே சம்பாதிக்கவில்லை. அவருக்கு வெளியில் நடிக்கத் தெரியாது. வெளி மாநிலத்தில் செட் போட்டு படம் எடுப்பதை விட நம்மூரில் செட் போட்டு எடுக்கலாமே..நமது ஜுனியர் ஆர்ட்டிஸுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய மாட்டேன்கிறார்கள்.