கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் எதிர்பார்ப்பு மிக்க வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை தமிழில் வழங்குகிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் கபில்தேவ், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கமல்ஹாசன் மற்றும் கபில்தேவ் அக நடித்து இருக்கும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர் .

தொடர்ந்து மேடையில் 83 அணியில் விளையாடியவர்களின் கதாபாதிரங்களாக இப்படத்தில் நடிப்பவர்களை, ஒவ்வொருவராக, அறிமுகப்படுத்தினார் ரன்வீர் சிங்.
படத்தில் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் நடிகர் ஜீவா பேசும்போது, ”
கமல் சார் இந்த மேடையில் 18 வருடம் முன் என்னை நடிகனாக அறிமுகப்படுத்தினார். இன்று அவர் இங்கு இருப்பது மகிழ்ச்சி. கபீர் சார் இந்தக் கதாப்பாத்திரம் சொன்னபோது ஶ்ரீகாந்த் சார் கேரக்டரை நான் எப்படி செய்ய முடியும் என பயந்தேன். ஆனால் படக்குழு அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னை 6 மாதம் பயிற்றுவித்தார்கள். ஷீட்டிங்கின் போது கபில்தேவ் சார் வந்திருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார்.
இயக்குநர் கபீர்கான் , “கமல் சாருடன் இன்று இருப்பது பெருமை. நான் சிறுவனாக இருந்த போது 83 உலககோப்பையை வென்றதை பார்த்திருக்கிறேன். உலககோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்தவர்கள் இளம் வீரர்கள். அவர்களை யாரும் நம்பவில்லை ஆனால் அவர்கள் கோப்பையை வென்றெடுத்தார்கள். இந்தியாவே மொத்தமாக கொண்டாடிய தருணம் அது. கமல் சார் இப்படத்தை தமிழில் முன்னெடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.” என்றார்
தயாரிப்பாளர் சசிகாந்த் , “என் முன்னால் இன்று மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். நான் 83 படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. இப்படத்தில் ரண்வீர், கபீர்கான், தீபிகா என நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களாக பெரும் ஆளுமைகள் பங்குகொண்டிருக்கிறார்கள். இப்படம் பற்றி முன்பு ஒரு சிறு ஐடியாகவாக பேசும்போது நடக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. இப்போது உண்மையிலேயே நடக்கிறது. கமல் சார் இதில் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை.” என்றார்
ஶ்ரீகாந்த் தனது பேச்சில், “உண்மை என்னவெனில் 83 உலககோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ்தான். அவன் தன் முதுகில் மொத்தத்தையும் சுமந்தான். கபில்தேவ்வாக யாருடா நடிப்பார்கள் எனப் பார்த்தேன். ரன்வீர் கடும் உழைப்பை தந்திருக்கிறார். ஒரு நாளில் 16 மணி நேரம் பயிற்சி எடுத்து செய்துள்ளார். கபீர்கான் மிகச்சிறந்த இயக்குநர் மிக அருமையாக எடுத்திருத்திருக்கிறார். கபில்தேவ் எப்படி உற்சாகமாக இருப்பரோ அதே போல் ரன்வீர் இருக்கிறார். ஜீவாவும் நன்றாக செய்துள்ளார். ” என்றார்.
கபில்தேவ் தனது பேச்சில், ” என்னுடன் இருந்த 83 அணிக்கு முதலில் நன்றி. இப்போது அதனை மீட்டுருவாக்கம் செய்யும் அனைவருக்கும் நன்றி. தமிழகம் வந்தபோது நான் தமிழை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் எவ்வளவு அழகான மொழி. ஐ லவ் சென்னை. கமல்ஹாசன் சார் இன்று எங்களுடன் இணைந்திருப்பதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் அப்போது விளையாடியபோது எப்போதும் உற்சாகமாக பரபரப்பாக இருப்பார். இப்படம் பல நினைவுகளை தரக்கூடியது இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்றார்
கமல்ஹாசன் தனது பேச்சில், “இது மிக அரிய தருணம். இத்தனை திறமைகளுடன் நிற்பது பெருமை. 83 உலககோப்பைய வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் சொன்னார். பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டங்களை தாண்டி வென்றார்கள் என்ற கதையை கேட்டபோது சூப்பர் ஹீரொக்கள் வரும் அவஞ்சர் கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது. இந்த படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

“83” படத்தை Kabirkhan Films Productions, Rajkamal Films International, Reliance Entertainment இணைந்து வழங்குகிறார்கள். தயாரிப்பு – கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment.
Reliance Entertainment, Y Not X இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.