எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ராங்கி

எங்கேயும் எப்போதும் என்ற அட்டகாசமான படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட இயக்குனர் சரவணன் இப்போது லைகா மூவீஸ் தயாரிப்பில் திரிஷா நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ராங்கி 

 
ராங்கி என்பது தன்னம்பிக்கையால் ஏற்படும் செருக்கு .  இது ஒரு கதாநாயகி முக்கியத்துவப் படம். 
 
இதில் திரிஷா  பத்திரிக்கையாளராக வருகிறார் . 
ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையை அந்தப் பத்திரிகையாளர் கையில் எடுக்க , அது அயல்நாடு வரை போக , அங்கே போனதும் அதன் வேர் தனிப்பட்ட பிரச்னையில் இருந்து பொதுப் பிரச்னையாக மாற அப்புறம் என்ன நடக்கிறது என்பதே படம். 
 
அதில் சில சரியான விசயங்களை சொல்ல நினைத்த தன்னை சென்சார்  விடவில்லை. என்கிறார் சரவணன் 
 
”லிபியா மீது அமெரிக்கா தொடர் பகைமை பாராட்டக் காரணம் அதன் கனிம வளம் . எனவே கனிம வளம் உள்ள இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன் . சென்சார் விடவில்லை.
அமெரிக்க நட்பு நாடு என்று சொல்லி விட்டார்கள் . அதனால் படத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரி போட்டு விட்டார்கள். லிபியா, ரா (உளவுத்துறை) போன்ற வார்த்தைகளைக் கூட தணிக்கை செய்து விட்டார்கள். 
 
ஆனால் அது  கமர்ஷியலாக படத்தை பாதிக்காது. சிறப்பான  ஆக்ஷன் படமாக இருக்கும்” என்று சொல்லி டிரைலரையும் போட்டுக் காட்டினார். 
 
உஸ்பெக்கிஸ்தான் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தது . 
திரிஷா டபுள் மீனிங் டயலாக்  வேறு பேசுகிறார் . போதாதா?
 
படம் டிசம்பர் முப்பது அன்று திரைக்கு வருகிறது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *