‘இராவண கோட்டம்’ திரைப்படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’ . ( ‘இராவணக் கோட்டம்’ என்று எழுதுவதே சரியான தமிழ். எல்லோரும் எட்டு எழுத்து வரக்கூடாது என்பதற்காக மெய்யெழுத்துக்களைக் கொல்வார்கள். ஆனால் சரியான தமிழ் இயல்பாக இருந்தும் இவர்கள் தமிழ்க் கொலை செய்து எட்டு எழுத்துக்கு விரும்பி வந்திருக்கிறார்கள்). 

நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார் .ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.  மே 12 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 

முன்னோட்டம் திரையிடப்பட்டது 

நிகழ்வில்   எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியபோது, “இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று கூறினேன். அதுபோல படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பிணைப்பு உருவானது, இந்த படத்தில் நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன், சாந்தனு சார் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பைப் போட்டுள்ளார் கண்டிப்பாக அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கும். “என்றார் 

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசியபோது, “மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , சாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப் படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார். கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. “என்றார். 

நடிகர் சஞ்சய் பேசியபோது, “எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன், இந்தப் படத்திற்காக நிறைய ரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம்,

இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் “என்றார். .

கலை இயக்குநர் நர்மதா பேசியபோது, “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றி,  இது மிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்”ன்றார் 

நடிகை தீபா பேசியபோது, ” இராவணக் கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமாரன் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்ன என்று கற்றுக் கொள்ளலாம், இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தம்பி சாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் . மனைவியை கையை முறுக்கி ஒரு கணவன்  கொடுமையாக அடிக்கும் வீடியோ ஒன்று பார்த்தேன். அப்படி செய்யாதீர்கள். அவள் நம்பி வாழ வந்தவள் “என்றார் 

நடிகர் இளவரசு பேசியபோது, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள், விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள், இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது , அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர்.

இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன், அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான், பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்த குழுவினர் உழைப்பை,  மக்களிடம்  நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். “என்றார். 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசியபோது, “மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், சாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.”என்றார்.   

நடிகை கயல் ஆனந்தி பேசியபோது, “3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, சாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாதபுரம் மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். “என்றார். 

நடிகர் சாந்தனு பேசியபோது, “இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.  இந்தப் படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன். ஒரு நிலையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது,  அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன். எந்தப் படத்திலும் நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டுதான் நடித்தனர்,  இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர், இது ஒரு தரமான படைப்பாக இருக்கும், அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் “என்றார். 

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசியபோது, “இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை, அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது, இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன், இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம், 

நான் ஒரு பிடிவாதமான இயக்குநர், யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை, எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது , படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில்தான் உருவானது, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் சாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு நன்றி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.”என்றார் 

. “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *