யாத்திசை படத்தில் தேவரடியார்களை வைத்து தன் அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் பிராமணராக நடித்த முகத்தை மறந்திருக்க முடியாது .
அவர் பெயர் சாம்சன் சொந்த ஊர் கேரளம் பாலக்காடு.
கல்லூரி முடித்ததும் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். இருந்தாலும் சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து இருக்கிறார்.
இயக்குனர் நாகாவின் ஆனந்தபுரத்து வீடு உள்ளிட்ட படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
அந்தப் படத்தின் காஸ்டியூம் டிசைனர் சுரேஷ்குமார், காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார்.
அவர் மூலம் யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரனை சந்தித்து இருக்கிறார்.
அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி இருக்கிறார்.
மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருக்கிறார்.
யாத்திசை படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுக் கால்கள் வந்து கொண்டே இருக்கிறதாம்.
அடுத்து இதுவரை ஆறு படங்கள் கமிட் ஆகி இருக்கிறதாம்!
மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறதாம்.
தவிர இவர் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் கூட . மார்சியல் ஆர்ட்சும் தெரியுமாம்
கலக்குங்க யாத்திசை சாம்சன்!