சஞ்ஜீவன் @ விமர்சனம்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  வினோத் லோகிதாஸ், திவ்யா  துரைசாமி, சத்யா, ஷிவ் நிஷாந்த்,  விமல் ராஜா நடிப்பில் பாலு மகேந்திரா சினிமாப் பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கி இருக்கும் படம். 

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற – அதிலும் அலுவலகம் சென்றும் வீட்டில் இருந்தும் வேலை பார்க்கிற– காதலிக்கிற – பேச்சிலர் வாழ்வை ரசிக்கிற  — தம் தண்ணி அடிக்கிற – அப்படி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத – ஸ்னூக்கர் விளையாடுகிற சில இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாழ்வில்  சில மாதங்களில் நடக்கிற சம்பவங்களே படம் .

இயக்குனர் மணி சேகரின் ஷாட்களும் கார்த்திக் ஸ்வர்ண குமாரின் வண்ணம் ஜொலிக்கும் ஒளிப்பதிவும் கண்களை மயக்குகிறது 

தனுஜ் மேனனின் இசையும் வீசமரின் கலை இயக்கமும் சிறப்பு.  பொதுவில் வண்ணப் பயன்பாட்டில் அனைவருமே ஜொலித்து இருக்கிறார்கள் 

நாயகன் நாயகிக்கு இயக்குனர் வைத்திருக்கும் நிலன் , நிரல்யா என்ற பெயர்கள் அற்புதம்.  குமரிக் கண்டத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னனின் பெயர் நிலந்தரு திருவில் பாண்டியன். இரட்டை அர்த்த நேரடிக் காமெடிகளை விட அன்பே சிவம் போன்ற புத்திசாலித்தனமான காமெடிகள் சிறப்பு . ஐ  டி கம்பெனி எம் டி யாக வரும் ஸ்ரீதர் நாராயணன் சில காட்சிகளே வந்தாலும் கல கல .

நடிக நடிகையரிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் .  கதாநாயகியை பாலு மகேந்திரா பாணியில் காட்ட முயன்று இருக்கிறார் . படமாக்குதலுக்கு சிரமமான ஸ்னூக்கர் விளையாட்டு சம்மந்தமான ஷாட்கள் இயக்குனருக்கு சபாஷ் போட வைக்கின்றன . 

வினோத் லோகிதாஸ், திவ்யா  துரைசாமி, சத்யா, ஷிவ் நிஷாந்த்,  விமல் ராஜா உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர் . 

முத்துவின் உடைகள் அருமை .

சஞ்ஜீவன் என்ற வார்த்தை  மொழிப் பிழை . சஞ்சீவன் என்பதே சரி . என் ஜீவன் என்பது போல சஞ்ஜீவன் என்று எழுதக் கூடாது . 

மேக்கிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருப்பவர்கள் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் .

இது ஸ்னூக்கர் விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து இருந்தால் அந்த பிரச்னை இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்திருக்க வேண்டும் .  இயக்குனரின் கருத்துப்படி இது சில நண்பர்களின் சில மாத நிகழ்வுகளே என்றால் ஸ்னூக்கர் விளையாட்டு விசயத்துக்கு முதல் காட்சியில் இருந்து இடைவேளை வரை  அவ்வளவு முக்கியத்துவமும் நேரமும் கொடுத்து இருக்கக் கூடாது . 

இரண்டாம் பகுதியில் வரும் கிராமத்து திருடன் காட்சிகள்  திரைக்கதைப் பஞ்சத்துக்கு உதாரணம் . 

அதிலும்  கஷ்டப்பட்டு ரசிக்கும்படி ஒரு கிளாமர் பாட்டு எடுத்து விட்டு அதை முடித்த விதமும் , மலம் கழிப்பது தொடர்பான காட்சிகளும் அருவருப்பு. அதை எல்லாம் காமெடி என்று இன்னமுமா (இளம் படைப்பாளிகள்)  உலகம் நம்புது ?. 

எனினும் இந்தப் படத்தின் இயக்குனர் உட்பட சில டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள் சினிமாவில் வெற்றிகரமாக ஜொலிக்க வாய்ப்புகள்  அதிகம் . 

அனைவர்க்கும் வாழ்த்துகள் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *