கண்ணகிக்கு சிலை வடிக்க உதவிய ‘கௌதமி புத்ர சாதகர்ணி ‘

sadhan

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி சுமார் 150 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், 

அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்திரா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தின் நாயகி ஸ்ரேயா.

மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.

sadha 1

வசனத்துடன் தமிழாக்கப் பொறு ப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.

இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.

தமிழாக்கத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் ஒரு தெலுங்கு அரசன் தாய்க்கு  முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததும், 

பல வட இந்திய மன்னர்களை  வென்றதும் சொல்லப்படுவது தெரிந்தது .

sadha 5

நிகழ்சசியில் பழம்பெரும் நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, லதா , கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்

“என் டி ஆர் போலவே அவர் மகன் பாலகிருஷ்ணாவும் மிகப் பெரிய நடிகர் . அவர்  நடித்த நூறாவது படம் பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி” என்றார் நிர்மலா.

‘என் டி ஆருடன் நான் நடித்த ஒரு படத்தில்தான்   பாலகிருஷ்ணா முதன் முதலில் நடிகராக அறிமுகம் ஆனார் . அவரது நூறாவது படம் பற்றிய நிகழ்சசியி ல் நான் கலந்து கொள்வது நிஜமான பெருமை ” என்றார் நடிகை லதா

sadha 4

கே எஸ் ரவிக்குமார் பேசும்போது ” நான் இந்தப் படத்தை தெலுங்கில் முன்பே பார்த்து விட்டேன். இவ்வளவு பெரிய — பிரம்மாண்டமான படத்தை கிரிஷ் 72 நாளில் முடித்ததாக அறிந்தபோது நான் அசந்து போனேன் .

வேகமாக படம் எடுப்பது எப்படி என்பது பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டுக் கொள்ள இருக்கிறேன் . ஏனென்றால் பாலா கிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் நான்  படத்துக்கு அது உதவும் ” என்றார்.

sadha 2

“மன்னன் சாதகர்ணி பற்றிய குறிப்புகளை லண்டன் மியூசியத்தில் போய் எடுத்து வந்தார் இயக்குனர் கிருஷ் .

கதையின் இயற்கை உண்மை குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக மத் திய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்கு சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார்.

அந்த காட்சிகள் திரையில் பார்பதற்கு பிரமாண்டமாக இருக்கும். ஆயிரக்கணக்கான குதிரைப்படைகளையும் , பல்லாயிரக்கணக்கில் காலாட்படையும்

sadha 7

மற்றும் பல குறுநில மன்னர்கள், அரசவை சேனைகளும், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை பார்க்கும் போது, 

நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும் .

 பாகுபலி படத்தை போன்ற பிரமாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும் கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் இந்த கெளதமி புத்ர சாதகர்ணி திரைப்படம் ”

-என்றார் படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கும் தனக்கோடி புத்ர மருதபரணி.

இயக்குனர் கிரிஷ் பேசும்போது sadha 3

“தமிழில் நான் இயக்கிய வானம் படத்துக்கு அனைவரும் தந்த வரவேற்புக்கு நன்றி. இந்த தெலுங்குப் படம் கற்பனைக்  கதையல்ல . உண்மை வரலாறு .

(தமிழைப்  பற்றி கேவலமாகப் பேசிய வட   மன்னர்களை வென்ற) தமிழ் அரசன் சேரன் செங்குட்டுவன் , வடக்கே இருந்து கண்ணகி சிலை வடிக்க கல் கொண்டு வந்த போது ,

செங்குட்டுவனுக்கு உதவிய அரசன் கவுதமி புத்ர சாதகர்ணி . இது பற்றி நூற்றுக் கண்ணனார் என்ற தமிழ்ப் புலவர் எழுதி இருக்கிறார்

sadha 6

இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் . விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்க இருக்கிறேன் ” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *