ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்,நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் கதிர் “நான் நடித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அனைவரும் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி , இந்த சத்ரு படம் ஒரு நேர்மையான சீரியசான பரபரப்பான ஆக்ஷன் படம் . மிக நேர்த்தியாக படத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார் .
எல்லோரும் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி பற்றி சொல்வார்கள் . இந்தப் படத்தில் ஹீரோ வில்லன் கெமிஸ்ட்ரி இருக்கும் . வில்லனாக லகுபரன் அட்டகாசமாக நடித்துள்ளார் ” என்றார் .

லகுபரன் பேசுகையில் , ” நாயகன் கதிர் – வில்லனாக நடித்த இருவருக்குமே நல்ல ஸ்கோப் இருந்தது . அப்படி ஒரு எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் , தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி . படம் மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
நாயகி சிருஷ்டி டாங்கே பேசுகையில் , ” அட்டகாசமான படம் இது . வில்லனாக லகுபரன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . ஹீரோ கதிரும் அசத்தி இருக்கிறார் . இயக்குனர் மிகப் பெரிய புகழை பெறுவார் ” என்றார் .

இசை அமைப்பாளர் அம்ரேஷ் தனது பேச்சில் , “படம் மிக சிறப்பாக வந்துள்ளது . கதிர் லகுபரன், சிருஷ்டி டாங்கே எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் . கஷ்டப்பட்டு நான் போட்ட பாடல்களை எல்லாம் சுருக்கி விட்டார்கள் . இனி எல்லா படத்திலும் படத்திலும் ஹீரோயினை பாட வைக்கப் போறேன் . அப்போதான் பாடலை தூக்க மாட்டார்கள் ” என்றார்.
நடிகர் மாரிமுத்து பேசும்போது, ” இயக்குனர் மிகச் சிறந்த படைப்பாளி . இந்தப் படம் வெல்லும் . நிறைய படங்களை அவர் இயக்குவார் ” என்றார் .

இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் பேசும்போது , ” கதிருக்கு மிக்க நன்றி . படத்துக்கு அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பானது .
இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

படம் முதலில் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.”என்றார்.
மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு மார்ச் 8 ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
