மார்க்கெட்டின் மார்க்கெட்டுக்கு குறி வைக்கும் ‘செயல்’

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “ 

ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.  

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது. 

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டு  மகிழ்ந்தனர் . 

நாயகன் ராஜன் தேஜெஸ்வரின் உழைப்பை பலரும் பாராட்டினர் . 

” புதுமுகங்களை வைத்து நிறைய படங்களை கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் .                          

வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர் பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது.

இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது.  மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால்,

ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.

இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா ? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும்.இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக்கூடிய  விஷயங்கள் அனைவரையும் கவரும். 

இதில் ரவுடிகளுக்கு குருவாக ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற ரவுடிகளாக முன்டாசுப்பட்டி ராமதாஸும், சூப்பர்குட் சுப்ரமணியம் நடித்துள்ளனர். அதே மார்கெட்டுக்காக போட்டி போடும் ரவுடி கதாப்பாத்திரத்தில் தீனா நடித்துள்ளார்.

ரவுடிக்கு ஆலோசனை சொல்லும் முக்கிய பாத்திரத்தில் தீ பெட்டி கணேசன் நடித்துள்ளார்.ரவுடியின் அடாவடி மனைவியாக வினோதினி நடித்துள்ளார். ஹீரோவின் தாயாராக ரேணுகா நடித்துள்ளார். ” என்றார்  இயக்குனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *