ஆர். கார்த்திக் மற்றும் எம் . நியாஷ் தயாரிப்பில் சிறுமி பிரியா கல்யாண், யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்ஸ்லி, , kpy பாலா , ஜார்ஜ் விஜய் நடிப்பில் கல்யாண் இயக்கி இருக்கும் படம்.
குடிகார அப்பனால் (ஆண்டனி தாஸ்)அடித்துக் காயப்படுத்தப்பட்ட அம்மா குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு மரணித்து விட , திருந்தாத அப்பனைக் காப்பாற்றிக் கொண்டே பள்ளிக் கூடத்தில் படித்தபடி அப்பனின் செருப்புக் கடையிலும் பணி புரியும் சிறுமி (பிரியா கல்யாண்) கையில், டைம் டிராவல் செய்யும் ஷூ கிடைக்கிறது .
அந்த ஷூவைக் கண்டு பிடித்த இளம் விஞ்ஞானி (திலீபன்) அதைத் தேட, அந்த ஷூ ரவுடியாக ஆசைப்படும் ஒரு நபரின் (யோகி பாபு) கையில் கிடைக்கிறது . சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்குப் பயன்படுத்தும் ஒரு கும்பலிடம் குடிகார அப்பன் , தன் மகளை விற்று விட , அவள் சக சிறுமிகளோடு அங்கிருந்து தப்பிக்க முயல, அவளைக் காப்பாற்ற ரவுடியும் அவனது நண்பர்களும் ( ரெடின் கிங்ஸ்லி, , kpy பாலா) வர , விஞ்ஞானியும் அந்த இடத்துக்கு வர நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
இயக்குனரின் மகள் சிறுமி பிரியா முழு நீள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கிறார் .
யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி, , kpy பாலா சிரிக்க வைக்க கடைசிவரை முயல்கிறார்கள்.
காடு கரை மேடுகளில் நிறைய சிறுமிகளை நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் .
குடிகார அப்பன் சிறுமி காட்சிகள் நெகிழ்ச்சி .
சிறுமிகளுக்கு தன்னம்பிக்கை தரும் காட்சிகள் அருமை .
தன்னை காசுக்கு விற்ற அப்பனையும் காக்க என்னும் சிறுமியின் கதாபாத்திரம் நெகிழ்வு .
சாம் சி எஸ் இசை படத்துக்குப் பலம்
கடத்தப்படும் சிறுமிகளின் நிலை குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வீட்டில் பிள்ளைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தவேண்டிய படம் கடைசியில் தேவை இன்றி அவர்கள் வைத்த திருப்பத்தால் குப்புறக் கவிழ்கிறது .
எந்த அழுத்தமும் இல்லாத வெகு சாதாரண படமாக்கலும் மைனஸ்