ஓவியராக வாழ்க்கையைத் துவங்கி நடிகர் ஆகி , இரண்டு கதாநாயக நடிகர்களுக்கு அப்பாவாகி அதற்கடுத்து கம்பராமாயணம் மகாபாரதம் இவற்றைப் பற்றிய பேச்சுரை ஆசிரியராக ஜொலிக்கிறார் சிவகுமார்.
கம்பராமாயணம் , மகாபாரதம் இவற்றை அடுத்து திருக்குறளை எடுத்துக் கொண்டார் சிவகுமார் . பிரபலமான மற்றும் தனது உறவுகள் உட்பட்ட பிரபலமல்லாத மனிதர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சம்பவத்துக்கும் பொருத்தமாக ஒரு திருக்குறளை சொல்லும் வகையில் வள்ளுவர் வழியிள் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள் என்ற விளக்கத்தோடு ‘திருக்குறள் 100’ என்ற தலைப்பில் ஈரோடு புததகத் திருவிழாவில் உரை அரங்கேற்றம் செய்தார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்ற குரலில் துவங்கி நூறாவது சம்பவமாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்ற குரலோடு முடித்தார்.
தங்களை அறியாமலே வள்ளுவர் வழியில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்வையும் அதற்கான சம்பவங்களையும் இடை விடாது தொடர்ந்து நான்கு மணிநேரம் அந்த உரையில் கொண்டாடினார் சிவகுமார். அதனால் ஒரு மாபெரும் இலக்கிய சாதனை என்று தமிழறிஞர்களால் கொண்டாடப்பட்டார்.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அந்த உரை ஆற்றுதல் நடந்தபோது இரவு நெடுநேரம் சென்றும் கூட்டத்தினர் கவனம் சிதறாமல் உரையைக் கேட்டது ஒரு மாபெரும் சாதனை
பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் துவங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து மூன்று நாட்கள் (15, 16, 17- 01- 2023 ) பிற்பகல் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகிறது . அடுத்து புதுயுகம் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதை ஒட்டி திருக்குறள் 100 நிகழ்ச்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது . . உண்மையிலேயே பார்க்க வேண்டிய பயனுள்ள நிகழ்ச்சி
