“அஜித்துடன் என் பயணம் தொடரும் “- துணிவு தயாரிப்பாளர் போனி கபூர்

துணிவு படத் தயாரிப்பளர்  போனி கபூர் துணிவு படம் பற்றி கூறும் போது, “துணிவு படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் . நான் இந்தப் படத்தை ரசித்து தயாரித்தேன்.

ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் சமம்தான். அது போல எனக்கு நான் தயாரித்த எல்லா படங்களும் சமம்தான். நான் தயாரித்த நேர்கொண்ட பார்வை, வலிமை , நெஞ்சுக்கு நீதி ,  விசேஷங்க எல்லா படங்களும் எனக்கு அப்படித்தான். ஒரு படத்தை ரசித்து சரியாக தயாரித்தால் வெற்றி உறுதி . துணிவு படத்தில் நாம் அனைவருமே வெற்றி பெற்று உள்ளோம் . அஜித், வினோத் , ஜிப்ரான் எல்லோரும் சிறப்பாக பங்களித்து உள்ளனர் . மஞ்சு வாரியார் கிளாமராக  ஜொலிக்கிறார்.

என் மேல் அஜித், வினோத் இருவருக்கும் நம்பிக்கை இருந்தது. எனக்கும் அவர்கள் மேல் இருந்தது . இது நல்ல பயணம் . எங்கள் பயணம் இனியும் தொடரும்.

சார்லி சாப்ளின் தமிழ்ப் படத்தை நான் நோ என்ட்ரி என்று இந்தியில் எடுத்தேன் . அதற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது . உலக அளவில் நல்ல படங்கள் பல்வேறு மொழிகளில் பல்வேறு முறை எடுக்கப்படுவதும்  தொடர்ச்சி எடுக்கப் படுவதும்  மொழி மாற்றம் செய்யப்படுவதும் சகஜமே. ஓ டி டி இன்னும் பெரிய அளவில் படங்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது

துணிவு இந்தியில் ஓ டி டி மற்றும் டிவிக்காக மொழி மாற்றம் செய்யப்படும் .

புதிய படைப்பாளிகளோடு  கரம் கோர்க்க காத்திருக்கிறேன் . இந்தியாவின் பல மொழிப் படைப்பாளிகளின் முதல் இந்திப் படம்  என்னால் தான் தயாரிக்கப்பட்டது .

பயோபிக் படங்களில் எனக்கு ஆர்வம் இல்லை

ஒரு தயாரிப்பாளராக என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும் . நான் கூரை மேல் உட்கார்ந்து சத்தம் போட மாட்டேன் “என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *