*‘சீயான் ’விக்ரமின் ‘மகான்’ படத்திலிருந்து ‘போனா போவுறான்னு..’ பாடல் !

*‘சீயான் ’விக்ரமின் ‘மகான்’ படத்திலிருந்து ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியானது.*
 
. சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் அறுபதாவது திரைப்படமான ‘மகான்’ படத்திலிருந்து மூன்றாவது பாடலாக ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் தமிழைத் தவிர தெலுங்கில் ‘போதே போனி..’ என்றும், மலையாளத்தில் ‘வேண்டா வேண்டா என்னு…’ என்றும்,   கன்னடத்தில் ‘ ஹோட்ரே ஹோக்லி அன்டே..’ என்றும் இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது.
 
இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நீங்கள் யாரையாவது விரும்பும்போது அவர்கள் உங்களை விரும்பவில்லை என்றால், அவர்களை விடுவித்து விடுங்கள் என்பதை நுட்பமான செய்தியுடன் கூடிய பாடலாக ‘போனா போவுறான்னு..’ என்ற பாடல் அமைந்திருக்கிறது.
 
‘சீயான்’ விக்ரம் நடித்திருக்கும் ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. கன்னடத்தில் இந்தப் படத்திற்கு ‘மகா புருஷா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
 
மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார்.
 
அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை. 
 
‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் பாடலுக்கான லிங்க்…
 
Tamil: Pona Povura https://youtu.be/k5N4Jq6XbAs
Malayalam: Venda Venda Ennu https://youtu.be/29AS5nbCb-A
Kannada: Hodre Hogli Anta https://youtu.be/jUTbQbhWpZo
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *