ஸ்ட்ரைக்கர் @ விமர்சனம்

ஜே எஸ் ஜே சினிமாஸ் மற்றும் ஏ எஸ் வி கிரியேஷன்ஸ் சார்பில் ஜஸ்டின் விஜய் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் , கஸ்தூரி, அபிநயா ஷங்கர் நடிப்பில் எஸ் ஏ பிரபு இயக்கி இருக்கும் படம். 

நவீன முறையில் ஆவிகளோடு பேசும் பயிற்சிக் கூடத்தில் பயிலும் ஒருவனுக்கும் ( ஜஸ்டின் விஜய்), அவனைத் தனது யூ டியூபுக்காக பேட்டிகாண வரும் பெண்ணுக்கும் ( வித்யா பிரதீப்)  சிநேகம் ஏற்பட, இருவரும் செத்துப் போன ஒருவரின் ஆவி இருக்கும் வீட்டுக்குள் அந்த ஆவியுடன் பேசப் போகிறார்கள் .

ஆவிப் பயிற்சியாளர் ( கஸ்தூரி)  கொடுக்கும் அறிவுரைகளை மீறி அவர் இயங்க ஆவி கடுப்பாகிறது . 

கடைசியில் இது எல்லாமே ஆவியுடன் பேச வந்தவருக்கு வைக்கப்பட்ட குறி .ஏன் என்ன எதுக்கு என்பதே படம். 

ஆரம்பத்தில் அஷ்டமா சித்திகள் பற்றி எல்லாம் ஆற அமர சொல்கிறார்கள் . ஆனா எதுக்கு இந்தப் படத்துக்கு என்று படம் முடியும்போது தோன்றும். 

ஒரு வீட்டுக்குள் ஒரு பொருளைத் தேடுவது என்றால் இருக்கிற எல்லா அலமாரி, மேஜை , டிராயர் எல்லாவற்றையும் திறந்து மூடித் தேடுவதை காட்டிக் கொண்டே ஏ ஏ ஏ … இருக்கிறார்கள் .

இத்தனைக்கும் படம் ஓடுவது என்னவோ ஒன்றரை மணி நேரம்தான் 

கிளைமாக்ஸ் திருப்பம் ஓகே . ஆனால் இயக்கம் நடிப்பு இவற்றில் இருக்கும் போதாமை பெரிய பலவீனம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *