ஒரு நீண்ட சோதனைக்கால கட்டத்தை தாண்டி மீண்டும் இயங்கத் துவங்குது தமிழ் சினிமா .
சென்னை தலைமைச் செயலகத்தில் 17.04.2018 அன்று அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ,
இது குறித்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்றுமாலை நடைபெற்றது.
இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்,
மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
இதில் விஷால் , எஸ்.ஆர்.பிரபு , கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்,
FEFSI தலைவர் RK செல்வமணி , கௌரவ செயலாளர் SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK . சுரேஷ் , ஆர். வி. உதயகுமார் ,
AL உதயா , பிரவீன்காந்த் , மிட்டாய் அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் விஷால் பேசும்போது , ” நடந்தது ஸ்ட்ரைக்கே அல்ல . ஆமாம் . இது வேலை நிறுத்தமோ தொழில் முடக்கமோ அல்ல .
தமிழ் சினிமாவை புதுப்பிக்கும் வேலைதான் இந்த நாற்பது ஐம்பது நாட்களாக நடந்தது .
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும்
டிக்கெட் விற்பனை முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்.தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும்.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது.
அதாவது இனிமேல் சினிமா தியேட்டர்களில் கட்டணம் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது.
அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது .
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரையிலான வெளியீட்டு படங்களை,
இப்போதே பட்டியலிட இருக்கிறோம்.
கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.
சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம்
சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது.
தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.
காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும்.
முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியாகும்.” என்றார் விஷால்.
