அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்,“theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம்,
அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.
தியேட்டர் ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், “இந்திய சினிமாரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்துநான் பெருமைப்படுகிறேன்.
இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்றுசொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில்உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்”என்றார்.
“உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியமொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள்தரவிருக்கிறோம். எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம”என்றுஅவர் மேலும் தெரிவித்தார்.
தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், “இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடிதளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில்தான் முதலில்வெளியாகின்றன. ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இதுதவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்பநாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும்இலவச டிக்கெட்டுகளையும்,
அதோடு எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தைப் பார்க்கும்அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்”என்றார்.
புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமானவலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும்.அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.
அதுமட்டுமில்லாமல், திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு ரசிப்பதற்கான டிக்கட்டுகளைஇலவசமாகவும் வழங்கி, பொழுதுபோக்கிற்கான புகலிடமாக அமைய உள்ளது theaterhoods.com.
15 ஜனவரி 2022 அன்று பொங்கல் தின விருந்தாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது செயல்பாடுகளைதொடங்க உள்ள இந்த தளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்துஇந்திய மொழிகளிலும் திரையரங்கு மற்றும் ஒடிடி அனுபவத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.
சந்தாதாரர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கை வழங்கும் அதே வேளையில், திரையரங்குகள், திரைப்படதயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த செலவில்லாத தீர்வையும்இது வழங்குகிறது. மேலும், பிவிஆர் போன்ற முன்னணி திரையரங்க குழுமங்களுடன் இந்த தளம்கைகோர்த்துள்ளது.
ஆகையால், சந்தாதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக theaterhoods.com விளங்கும். திரைப்படங்கள்,இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை போன்ற உள்ளடக்கங்கள் இந்த தளத்தில்கிடைக்கும்.
இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மூலம் உலகம் முழுவதும் தியேட்டர் ஹூட்ஸின் சேவைகிடைக்கும் .திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை செலவில்லாத விளம்பரத்திக்கு(புரமோஷனுக்கு) content@theaterhoods.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ட்ரைலர் மற்றும் தயாரிப்பு விவரங்களுடன் அணுகலாம்
இந்தத் தளத்தை இயக்குனர் திலகம் பாக்யராஜ் தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்