வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழாவில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு ,
இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் ,
படத்தில் கைரேகை துறை அதிகாரியாக நடித்தவரும் முன்னாள் காவல் துறை அதிகாரியுமான Forensic Officer தனஞ்ஜெயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் S.R. பிரபு பேசும்போது “இயக்குநர் வினோத் இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது ,
முதலில் இந்த கதைதான் ரொம்ப நம்பிக்கையான விஷயமாக இருந்தது. இரண்டாவதாக வினோத் மீது நம்பிக்கை இருந்தது.
தான் எடுத்து கொண்ட விஷயத்தில் தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதில் மிக தெளிவாக இருந்தார் அவர்.
தன் இரண்டாவது படத்திலே பெரிய படம் என்ற பதற்றம் இல்லாமல் இருந்தார். படம் எப்படி வரும் என்று எங்களிடம் முன்பு கூறியதை விட சிறப்பாக வந்தது.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடன் இது எங்களுக்கு இரண்டாவது படம். முதல் படம் மாயாவில் எங்களுக்கு முதுகெலும்பு போல் இருந்தார்.
அவரும் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தோம் அதிகமாக உழைப்பை கொடுத்து உள்ளார்.
குளிரிலும், வெய்லிலும் படத்தை நன்றாக படக் குழுவினர் நல்ல முறையில் முடித்துக் கொடுத்தனர்.
படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடன் இருந்து படத்தின் தரம் உயர தானாக முன் வந்து கலை இயக்குனர் கதிர் சார் உதவி பண்ணினார்.
எல்லாரும் பாராட்டும் போதுதான் சிவ நந்தீஸ்வரன் இந்த படத்தில் வேலை பார்த்தார் என்பது தனியா தெரிகிறது. அவர் எங்களில் ஒருத்தர்தான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது. படத்தை முழுமைப்படுத்தியது ஜிப்ரானின் இசை . அருமையாக இசை அமைத்து உள்ளார்.
இந்த படத்தில் கைரேகை நிபுணராக நடித்துள்ள தனஞ்செயன் உண்மையிலேயே கைரேகை நிபுணர் .
உண்மைய கதையை மையமாகக் கொண்ட படம் என்பதால் இயக்குனர் வினோத் பல பேரிடம் கலந்து பேசினார்
எனவே தனஞ்செயன் சாரே அதில் நடித்தால் இன்னும் நம்பகத் தன்மை இருக்கும் என்று அவரிடம் கேட்டார் அவரும் ஒத்துக்கொண்டு படத்தில் நடித்தார்.
படம் முடிந்து வரும் அனைவருமே ‘காவல் துறையின் மீது நல்ல எண்ணம் ஏற்படும் விதத்தில் படம் அமைந்து உள்ளது’ என்று சொல்வதில் சந்தோசம் ” என்றார்
நடிகர் கார்த்தி பேசும்போது “ஒரு படம் பார்த்து விட்டு, படம் நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதாது.மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இந்த வழக்குகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் தன் கஷ்டங்கள் வெளியில் தெரியாமல் போய்விட்டது என்று நினைத்து இருப்பார்கள்.
அந்த வழக்கு பற்றிய செய்தி இயக்குநர் வினோத் அவர்களுக்கு பத்திரிக்கை செய்தியாக வந்தது. எனக்கும் அது தேடி தேடி வந்தது. நல்ல படமாக அமைந்ததில் சந்தோசம்.
ராஜஸ்தானில் படபிடிப்பு நடத்தும் போது உணவு பிரச்சனை ஏற்படும். தயாரிப்பாளர் மொத்த படக்குழுவையும் விமானம் மூலம் அழைத்து சென்று,
தமிழ் நாட்டு உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். இயக்குநர் வினோத் படபிடிப்பைப் பற்றி அதிகத் திட்டங்களை வைத்து இருந்தார்.
ஆனால் பல பிரச்சனைகள் இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவர் இருந்தார்கள் அவர்களிடம் அனுமதி பெறுவதே பெருமபாடாக இருந்தது.
இதனால் நினைத்தபடி எடுக்க முடியவில்லையே என்று இயக்குநர் வருத்தப்பட்டார். ஆனால் படத்தொகுப்புக்கு பின்’ அவ்வளவு பிரச்னையை தாண்டி எடுத்தோம். படம் நல்லா வந்துருக்கு சார்’என்றார்.
ஒரு படம் எடுப்பதே அப்படி தான் இருக்கிறது நாம் பெரிய கனவுகளோடு செல்கிறோம் அதை எடுத்து முடிப்பது இறைவன் செயலாக இருக்கிறது.
சிவ நந்தீஸ்வரன் நன்றாக உழைத்து உள்ளார். இயக்குநர் வினோத் இந்த காட்சியில் இந்த உணர்வு வரவேண்டும் என முதலிலே எழுதி வைத்திருப்பார்.
ஜிப்ரான் அருமையாக அனைவருக்கும் பிடித்தது போல் இசை அமைத்து உள்ளார். தனஞ்ஜெயன் சார் நன்றாக நடித்து இருந்தார்.
கைரேகை எடுப்பதை பற்றி அவர் கூறுவார். அதை போல் காட்சிகள் அமைந்தது. காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக அமைய இது போன்ற காட்சிகள் உறுதுணையாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் சத்யன சூரியன்
இந்த படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார்கள்.
முக்கியமா அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயர் அதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்சியாக இருந்தது அனைவரும் என்னைப் பாரட்டினார்கள் என்றார்.
கதையை திரையில் கொண்டு வருவது என்பது மிக முக்கியமான ஒன்று பொருளாதார ரீதியாகவும் நடு நிலையாக இருந்து கதிர் சார் பார்த்துகிட்டார்.
இனி அனைத்து காவல்துறை சம்பந்தபட்ட படங்களில் அவர் கண்டிப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது. இயக்குநர் வினோத்தின் முதல் படம் அருமையான படம்.
ஆனால் இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும்.
கலை இயக்குனர் கதிர்
தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம்.
இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர்.
தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளைத்தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும். எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல.
நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன்.
இயக்குனர் வினோத்
எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிக்கடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது.
சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம்.
குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இந்த படத்தில் காதல் காட்சி பற்றி அனைவரும் கூறினார்கள்.
சில பேர் காதல் காட்சி நல்லா இல்லை என்றும் சில பேர் காதல் காட்சி அருமையாக வந்து உள்ளது என்றும் கூறினார்கள். பொதுவாக
ஒரு படத்திற்கு அனைத்து விதமான விமர்சனங்களும் வரும். ஆனால் இந்த படத்திற்கு
நல்ல விதமான விமர்சனங்கள் மட்டுமே வந்தது உள்ளது.” என்றார் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462