தேள் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க , பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , ஈஸ்வரி ராவ் நடிப்பில் ஹரிகுமார் இயக்கி இருக்கும் படம் . 

கோயம்பேடு மார்க்கெட்டில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்துக் கொழுக்கும் ரவுடியின் கையாளாக – பணம் கட்ட முடியாதவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கொடூரமாக அசிங்கப்படுத்திக் கொடுமைப்படுத்தி குதறிக் கொட்டி தற்கொலை வரை கொண்டு போகிற-  தேள் போல வாழும் ஒருவன் (பிரபு தேவா).

அவனை காதலிக்கும் பார் நடனக்காரப் பெண் ( சம்யுக்தா ஹெக்டே) . அவளது நண்பன் ஒருவன் ( யோகி பாபு).

சிறு வயது முதலே அனாதையாக வாழும் அந்த மனித மிருகத்தைத் தேடி வரும் ஒரு பெண் ( ஈஸ்வரி ராவ்) தான்தான் அம்மா என்றும் ”சிறு வயதில் முறையற்றுப் பிறந்த காரணத்தால் உன்னை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய் விட்டேன்” என்றும் கூறுகிறாள் . 

ஆரம்பத்தில் அவளை நம்பாமலும் பிறகு நம்பிய அப்புறமும் கூட அவளை அடித்துத் துவைக்கும் அவன் , ஒரு நிலையில் அன்புக்குப் பாத்திரம் ஆகிறான் . அதன் பிறகு அவன் வாழ்க்கையே மாறுகிறது. அதன் திடுக்கிடும் விளைவுகள் என்ன என்பதே இந்தப் படம் .

கொரிய மொழியில் கிம் கி டுக் இயக்கிய PIETA என்ற படத்தில் சில சில மாற்றங்கள் செய்து அப்படியே  தேள் ஆக்கி இருக்கிறார்கள். அதைப் பார்க்காதவர்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு உண்டு.

  பிரபு தேவா நன்றாக அடிக்கிறார் . சம்யுக்தா நன்றாக ஆடுகிறார் . ஈஸ்வரி ராவ் நன்றாக நடிக்கிறார் . யோகி பாபு நன்றாக பேசுகிறார் . 

நத்தை போல நகர்கிறது தேள் . 

திரைக்கதையில் இன்னும் நேர்த்தியும் கனமும் இருந்திருக்கலாம் . 

இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு அற்புதமான கிளைமாக்ஸ் தோன்றுகிறது . அதை செய்து இருந்தால் இன்னும் நேட்டிவிட்டியுடன் படம் சிறப்பாக அமைந்து பேசப்பட்டு இருக்கும்.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *