redhan சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, சசிகுமார் , மடோன்னா செபஸ்டியன், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சூரி, அபி சரவணன், ராகவ் விஜய் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி இருக்கும் படம் .
பல்வேறு சாதிப் பிரிவுகளால் மக்கள் பிரிந்து கிடக்கும் நிலையில், அரசியலும் பகைமையை வளர்க்கும் சூழலில் , எல்லா சமூகத்தையும் சேர்ந்த – சிறு வயது முதல் ஒன்றாக படித்து வளரும் இளைஞர்கள் அவற்றை சமத்துவ சமுதாயம் காண முயல்கின்றனர். அதற்கு எதிராக அதிகாரமும் முந்திய தலைமுறையும் செயல்படுகிறது . இந்த சூழலில் தேர்தலும் வர , அதனால் நடக்கும் நிகழ்வுகள் என்ன என்பதே இந்தப் படம்.

நட்பை உறவு வெற்றி கொள்ள முயலும் விதம் , அதோடு சாதியம் பின்னிக் கிடப்பது, அதனால் நட்பு பாதிக்கப்பட்டு பகை உருவாவது, இந்த போராட்டத்தில் உள்ள வஞ்சகம், தியாகம் , மகிழ்ச்சி , நெகிழ்ச்சி என்று பயணிக்கிறது படம் .
பரபரப்பான எதிர்பார்ப்பைத் தூண்டும் துவக்கம் . மீண்டும் கிளைமாக்ஸ் பகுதியில் பரபரப்பு ஏற்றுகிறார் இயக்குனர்
சசிகுமார் மிக அழகாக நடித்து இருக்கிறார் . சூரி ஒகே . நண்பராக இருந்து பின்னர் பகையாக மாறும் இளம் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவ் விஜய் சிறப்பாக நடித்துள்ளார்.

மாமனைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அது முடியாமல் போன நிலையிலும் பாட்டியின் மனதில் எனக்குத்தான் முதளிடம் என்று உறவின் சிறப்பை விளக்கும் காட்சி அருமை . அந்தக் காட்சியில் பிரியங்கா நடிப்பும் சிறப்பு
பார்த்துப் பழகிய திரைக்கதை , யூகிக்க் முடிகிற கிளைமாக்ஸ் ஆகியவை குறைகள்