தங்க மகன் மாரியப்பன் வெளியிட்ட ‘திருவிக பூங்கா’ முன்னோட்டம்

த பட்ஜெட்’ பிலிம் கம்பெனி  சார்பில் செந்தில் செல்.அம். தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம்  திரு.வி.க. பூங்கா 
 
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு  முன்னோட்டத்தை  வெளியிட்டு பேசினார்,
 
பாரா ஒலிம்பிக் போட்டியிள் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழன் …  இந்தியாவின் தங்கமகன்…. பத்மஸ்ரீ மாரியப்பன்.
 
படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள முன்னாள் ஆட்சியர் கிறிஸ்துதாஸ் காந்தியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் .
 
திரையிடப்பட்ட முன்னோட்டம் , ஒரு எளிய மனிதனின் காதல், மற்றும்ம் நம்பிக்கையைச்   சொன்னது . வித்தியாசமான வசனங்கள் மற்றும் சிந்தனைகளால் ‘அட!’ போட வைத்தது. 
 
எளிய நடுத்தர வயது கிராமத்துப் பெண்மணி உற்சாகமாக ஆடியபடியே வாழ்வைச் சொல்லும் பாடல்,
 
அப்பாவும் மகளும் உற்சாகமாக நடனம் ஆடிப் பாடும் பாடல் ஆகியவை திரையிடப்பட்டன .
 
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் சொற்கோ ” தங்க மகன் மாரியப்பனின் தாயார் காய்கறி விற்று கிடைத்த காசில் கஷ்டப்பட்டு பிள்ளையை வளர்த்தார்கள்.
 
காய்கறி விற்று கிடைத்த காசில் பயிற்சி பெற்ற பிள்ளை இந்தியாவுக்கு வெற்றிக் கனியைக் கொண்டு வந்தது .  
 
மாரியப்பன் இருக்கும் மேடையில் நான் இருப்பது பெருமை ” என்றார் . 
 
நிகழ்ச்சியில் பேசிய செந்தில் செல் .அம். ” இந்த படத்தைப் பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை. ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறேன்.
 

இது தற்கொலை கூடாது என்பதை அழுத்தமாக சொல்ல வரும் படம் . இன்று சமுதாயத்தின் பல மட்டங்களில் இருப்போருக்கும் தேவையான சிந்தனை அது . 
இவ்வளவு கருப்பாக இருக்கும் நான் கதாநாயகனாக நடிப்பதா என்றார்கள் . நம்பிக்கைதான் என் மூலதனம் .
 
நான்  ரசிகனின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள மாட்டேன்
 
 காரணம் நாம் செய்கிற பாவக் கணக்குகள் நம் சந்ததியை பாதிக்கும் என்பார்கள். உண்மையாய் உழைத்து,
 
தியேட்டரில் பணம் கொடுத்து இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் திருப்தியுறுவார்கள். 
 
அவர்களை ஏமாற்ற மாட்டேன். அப்படிச் செய்தால்  அதுவும் என் பாவக் கணக்கில் தான் சேரும். இந்த படம் அப்படியான படமில்லை.
 
இன்றைய நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிற குறளில்,
 
‘அறிவு’ என்பதை எடுத்துவிட்டு, ‘பகுத்தறிவு’ என்று மாற்றியிருப்பார். 
 
பகுத்தறிவுடன் யாரும் சிந்திக்காததால் தான் இன்று தோல்விகளும், தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ” என்றார் . 
 
ஆட்சியர் கிறிஸ்துதாஸ் காந்தி ” இதுவரை ஐ ஏ எஸ் ஆக நடித்தேன் .இப்போது அப்பாவாக நடித்துளேன் ” என்று எடுத்த எடுப்பில் நகைச்சுவை வெடி கொளுத்தினார்.
 
” இந்தப் படத்தில் நடித்த பிறகு என் மனைவி , பிள்ளைகள் , பேரன் பேத்திகள் மனதில் இன்னும் உயர்கிறேன் . அதுதான் சினிமாவின் சக்தி” என்றார் . 
 
முன்னோட்டத்தை வெளியிட்டுப் பேசிய தங்க மகன் மாரியப்பன் , ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.  
 
திரு.செந்தில் செல்.அம் . அவர்கள்  என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன்.
 
காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன் என்று என்னிடம் சொன்னார் .
 
எனக்குப் படத்தை போட்டும்  காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.
 
ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம்.
 
அப்பா இல்லாததால் அம்மாதான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள்.
 
அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 
 
மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. 
 
சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது.
 
2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது. 
 
அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
 
நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன்.
 
கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். ‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள்.  
 
சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.
 
சிறப்பு ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *