ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.
ஔடதம் என்றால் மருந்து என்று பொருள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நோய் தீர்த்து ஆரோக்கியம் பெருக்கும் மருந்து .
படத்தின் நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ், நடித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல்,
என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி.
சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவர் ஒருவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் — தரமான,
ஆனால் குறைந்த விலை மருந்து தடைசெய்யப்பட்ட அநியாயம் ,
அவரும் அவருக்கு வேண்டிய அயல்நாட்டு மருத்துவக் கம்பெனியும் லாபம் சம்பாதிப்பதற்காக ,
அயல்நாட்டு மருந்துக் கம்பெனியின் விலை உயர்ந்த ஆனால் மோசமான மருந்தை மத்திய அரசே அங்கீகரித்தது…
பின்னர் உண்மை தெரிந்து பழைய மருந்து மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும்,
விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்களாம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் .
“கடையில் இருந்து வாங்கி வந்த சாப்பாடு சரியில்லை என்றால் அது நமக்கு தெரியும் . மறுநாள் கடையை மாற்றுவோம் .
ஆனால் நாம் மெடிக்கல் ஷாப்பில் வாங்கி வரும் மருந்து மாத்திரை தரமானதா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாமலே,
நாம் சாப்பிட்டு மேலும் நோயாளியாகிறோம் . அது பற்றிய விழிப்புணர்வை இந்தப் படம் தரும் ” என்று பேசினார் இயக்குனர் ரமணி
ஒரு மருந்தில் கலக்கப்படும் மூலப் பொருட்களின் அளவு மாறினால் கூட அது ஆபத்தான மருந்து ஆகும் . அப்படி ஆபத்தான மருந்தாகி,
மேல் நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம் . இது பற்றியும் படம் பேசுகிறது ” என்றார் நாயகன் நேதாஜி

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி,
பெருதுளசிபழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படத்தைப் பார்த்து பாராட்டிய கீழக்கரை அஜ்மல்கான் , இந்தப் படத்தை வெளியிடுகிறார்.