மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் வெளியிட கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் , கிறிஸ்டியன் பேல் , டெஸ்ஸா தாம்சன் , ஜெய்மி அலெக்சாண்டர், ரஸ்ஸல் குரோவ், நட்டாலியே போர்ட்மன் நடிப்பில் ஜெனிபர் கேய்ட்டின் ராபின்சனுடன் இணைந்து திரைக்கதை எழுதி , தைக்கா வைட்டிட்டி இயக்க,
2017 ஆண்டு வந்த தோர் ரக்னரோக் படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் 29ஆவது படமாக வந்திருக்கிறது தோர் : லவ் அண்ட் தண்டர்.
தனது மகள் இறந்த நிலையில் தனக்கு தேவையான உதவிகளும் கடவுளால் நிராகரிக்கப்பட, அந்தக் கடவுளைக் கொல்லும் கோர் என்ற சக்தி வாய்ந்த நபர் அனைத்து பிரபஞ்சத்தில் உள்ள கடவுள்களையும் கொல்வதாகச் சபதம் செய்கிறான்.
காதல் தோல்வியில் மன அமைதி தேடிக் கொண்டு இருக்கும் நாயகன் தோருக்கு தனது முன்னால் காதலி கேன்சர் நோயில் வாடுவது தெரிய வருகிறது. தவிர தோரின் அழிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சுத்தியலான ஜோல்நிர் மீண்டும் உருவாகி அந்த முன்னாள் காதலியிடம் இருக்கிறது .
கோரை அழித்து கடவுள்களையும் நூற்றுக்கணக்கான குழந்தைகளையும் காக்க தனது முன்னாள் காதலி மற்றும் வல்கிரியே , கோர்க், ஜேன் போஸ்டர் ஆகியோருடன் கிளம்பும் தோர் அதில் எப்படி ஜெயித்தார் என்பதுதான் இந்த தோர் : லவ் அண்ட் தண்டர். பிரம்மாண்டம் , , வித்தியாசமான பிரபஞ்ச சித்தரிப்புகள், மார்வெல் படக் கருவிகள் என்று படம் கிராபிக்ஸில் விழிகளை விரிய வைக்கிறது . அபார வண்ணப் பயன்பாடுகள்.,.
காதல், காமெடி , செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் எல்லாம் அசத்துகிறது .
தோருக்கு துணை இருக்கும் வீராங்கனையாக வரும் டெஸ்ஸா தாம்சன் என்னா பொண்ணு சார்!
கொஞ்ச நேரமே வந்தாலும் கடவுள்களின் கடவுளாக அசத்துகிறார் ரஸ்ஸல் குரோவ்.
வித்தியாச உலகம் , வித்தியாச கதைக் களம் , வித்தியாச ஆயுதங்கள் பின்னணிகள் என்று மார்வெல் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் இந்தப் படம் .