கருணாகரன் , யோகி பாபு, லக்ஷ்மி பிரியா, லியோனி, ஷாதிகா, சிங்கம் புலி, தங்கதுரை, ராமர் நடிப்பில் ரவி முருகையாவின் கதைக்கு அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து , அனுசரண் படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம்.
வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் சந்திக்கும் ஓர் இளைஞன் (கருணாகரன்) ஓட்டி வந்த பைக்கை பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறான்.
பன்னிக்குட்டி மீது வண்டியை மோதுவது நல்ல சகுனம் என்பதால் அவனது ஆஸ்தான சாமியார் சொற்படி பரிகாரம் பெற மீண்டும் மோதுவதற்காக அதே பன்னிக்குட்டியைத் தேடுகிறான் .
ஆனால் கல்யாணச் சடங்காக ஐந்து நாள் பன்னிக்குட்டியை ஆபத்து நேராமல் வளர்க்கும் பழக்கம் உள்ள ஒரு இளைஞனுக்கு (யோகிபாபு) அந்த பன்னிக்குட்டி போய் விடுகிறது . பன்னிக் குட்டிக்கு எதுவும் ஆகி விட்டால் கல்யாணம் நின்று போய் விடும் என்பதால் அவன் அதை மிகப் பாதுகாப்பாக வளர்க்கிறான். முதல் இளைஞன் அந்த பன்னியை ஒரு வழியாக கண்டுபிடித்து , அதை தன் வண்டியால் மோத திட்டமிட , இரண்டாம் இளைஞன் அதை பாதுகாக்க முயல, இடையில் பன்றிக் காய்ச்சல் வேறு வர , நடந்தது என்ன என்பதுதான் இந்தப் படம்.
அருமையான கிராமிய லொக்கேஷன் , ஆங்காங்கே சில காமெடிகள் . யதார்த்தம் இல்லாத சாமியார் கதாபாத்திரமும் அதில் லியோனி நடிப்பும் மைனஸ்
வித்தியாசமான் கதை. திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்கள் . படத்தில் தொடர்ந்து வர வேண்டிய ஒரு கதாபாத்திரம் ஒரே சீனில் நின்று விடுகிறது.
இன்னும் கொஞ்சம் சின்சியராக முயன்று இருக்கலாம்.