சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமி அய்யாவின் வாழ்க்கையை உள்ளூக்கமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ .
டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா விழாவில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன், இயக்குநர் விக்கி ,
நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , நடிகை உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
” டிராஃபிக் ராமசாமி அவர்களை பெருமைப் படுத்தும் இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைத்த போது, சந்தோஷமாக வந்து நடித்தேன் .
” இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ் ஏ சி சார் என்னை டிராஃபிக் ராமசாமியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க , ஹீரோயின் என்று சொல்லி அழைத்த போது ,
வாழ்க்கையே போராட்டம் என்றால் அது இயல்பு . ஆனால் இப்போது நமக்கு போராட்டமே வாழ்க்கை என்று ஆகி விட்டது . இந்த நேரத்தில் டிராஃபிக் ராமசாமி போன்றவர்களை போற்றிப் பின்பற்றினால் நல்லது நடக்கும் .
” எஸ் ஏ சி சாரிடம் எட்டு ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன் . ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை அவரிடம் கொடுத்தேன் .அவரே நடித்து தயாரிக்கவும் செய்தார் . டிராஃபிக் ராமசாமி பற்றி பலரும அறியாத, ஆனால் அறிய வேண்டிய விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும் ” என்றார்
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,
” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .
ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன்.
ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை .படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.கதையைப் படித்து முடித்த போது டிராஃபிக் ராமசாமியும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது.
அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .
நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது,
கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது.