ஐந்து நொடி தாமதத்தின் அதகளம் — ‘ டியூப் லைட்’

tube 8

ஆஸ்ட்ரிச் மீடியா புரடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரிக்க,

இந்த்ரா  என்பவர்  நாயகனாகவும் சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதா நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடிக்க ,

மேற்படி நாயகன் இந்த்ரா கதை திரைக்கதை வசனம் எழுதி இசை அமைத்து இயக்கும் படம் டியூப் லைட் .

இந்த இந்த்ரா,  கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் ஊழியர்களின்  ஆளுமை திறனை வளர்க்க ஒரு நூதன பயிற்சியை நாடகம் மூலம் அளிக்கும் பயிற்சியாளராக இருந்தவர்.

tube 7

பல விளம்பரப் படங்களை இயக்கி அதற்கு இசையும் அமைத்தவர் .

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் , செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த் ஆயிரத்தில் ஒருவன், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜியிடம் ,

உதவி ஒளிப்பதிவாளராக இருந்ததோடு , கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் .

tube 6

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்துக்கு படத் தொகுப்பு செய்த சி எஸ் பிரேம் இந்தப் படத்துக்கு படத் தொகுப்பு செய்கிறார் .

பாண்டியராஜன் இந்தப் படத்தின் ஒரு வித்தியாசமான முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .  தவிர மலையாளத்தில் காமெடி ஹீரோவாக புகழ் பெற்றவரும்

தமிழில் டம்மி டப்பாசு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளவருமான பிரவீன் ரமேஷ் , நாயகனின் நண்பராக நடிக்கிறார்

tube 5

படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர் .

எதையும் ஐந்து நொடிகள் தாமதமாகவே  புரிந்து கொண்டு எதிர்வினையாற்றும் ஓர் இளைஞனின் நட்பு மற்றும் காதலில் நடக்கும் நிகழ்வுகளை உடல் மொழி நகைச்சுவையால் இயக்குனர் சொல்ல  முயல்வது புரிகிறது .

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ரவி நாராயணன், ” படம் தயாரிக்க முடிவு செய்து பல கதைகளை கேட்டோம் . எதுவும் பிடிக்காத நிலையில், 

tube 4

இந்த்ரா சொன்ன கதை புதுமையாக சுவாரஸ்யமாக இருந்தது . படத்தை எடுத்து இருக்கிறோம் ” என்றார் .

நாயகன் இந்த்ரா பேசும்போது , ” நிஜத்திலும் நான் ஓரளவுக்கு இந்தப் படத்தில் நடித்து இருக்கும் கதாபாத்திரம் போலத்தான் . அதில் நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை யோசித்தபோது, 

இதையே கதையாக செய்தால் இதுவரை வராத புதுமையான கதை வரும் என்று தோன்றியது . அப்படியே செய்தேன்.

tube 2

பாண்டிய ராஜன் சார் இது வரை பண்ணாத ஒரு வித்தியாசமான கேரக்டர்ல வர்றார் .  ‘என்னை இப்படி ஒரு கோணத்தில் நானே யோசிச்சுப்  பார்க்கல’ என்று படம் நடித்து முடித்த போது பாராட்டி விட்டுப் போனார்.

படம் சிறப்பாக வந்திருக்கிறது .  காதலை நட்பை பிரச்னையை ஸ்லாப்ஸ்டிக் காமடி மற்றும் பாடி லேங்க்வேஜ் காமடி மூலம் சொல்லி இருக்கிறேன் “என்றார்

”வாழைப் பழத்தில் வழுக்கி  விழுவதை எல்லாம் ச பார்த்து சிரிக்கிற ஸ்லாப்ஸ்டிக் காமெடி தமிழ் சினிமாவில் காலாவதி ஆகி விட்டது . இந்த நிலையில் நீங்கள் சொல்வது படத்தின் வெற்றிக்கு பலன் தருமா ?” என்றேன் .

tube 1

” இப்போ என்ன ட்ரெண்ட் என்பதை நான் பெருசா நினைக்கல. சிறு வயது முதலே சார்லி சாப்ளின் ரசிகன் நான் . அவரது ஸ்லாப் ஸ்டிக் மற்றும்  பாடி லேங்க்வேஜ் காமெடிக்கு இன்றும் உலகம் முழுக்க  வரவேற்பு இருக்கு .

அது போல சிறப்பான ஒரு வெற்றிகரமான காமெடி பிளஸ் காதல் படமா இது வரும் . எல்லாருக்கும் பிடிக்கும்”  என்றார் .

வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *