துள்ளிக் கிளம்பும் டூ டி பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் அணி

tuti 2
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
அதற்கான அணிகளில் வலுவான  இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டு உருவாகியுள்ள  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன்  கேப்டன் தினேஷ் கார்த்திக், 
“இவ்வளவு பெரிய  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக  விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன்,
இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 
tuti 8
இந்திய அணியின் சிறந்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோருடன் இணைந்து  இந்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக விளையாடுவது,
 எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தரும் என எதிர்பார்க்கிறேன்…”என்கிறார்,  சென்னையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’ சுந்தர். 
“வெறும் ஒரு கிரிக்கெட் போட்டியாக மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு அடித்தளமாகவும் இந்த ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 
தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியில் இணைந்து நான் விளையாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது…’ என்கிறார் ,
tuti 7
‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் முன்னணி வீரர் அபினவ் முகுந்த்.
“தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல திறமை படைத்த இளம் கிரிக்கெட் வீரர்கள் வெளியே தெரியாமல் இருந்து வருகின்றனர். 
இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016′ போட்டியின் மூலம் பல புது புது ஹீரோக்கள், புது புது நாயகன்கள்  உருவாகப் போகின்றனர். அதற்கு விதையாக  எங்கள்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி செயல்படும்…’ என்கிறார்
 ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’  அணியின் முன்னணி பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி.
“எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்ததோ, 
tuti 6
அதே போல் எங்கள் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்கும் சென்னையின் “சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிக்கும்  இடையே ஒரு நட்பு  ரீதியான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.. 
நிச்சயம் நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்தது ஒரு மூன்று வீரர்களையாவது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி பெற்று தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை…’
என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
.இந்த ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாய்யும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் ‘ரஞ்சி கோப்பை’ விளையாட்டு  வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர்.
tuti 5
“சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எல்லா  தென் மாவட்டங்களிலும், கிரிக்கெட் விளையாட்டு மீது உள்ள காதல், இளைஞர்கள் மத்தியில் பெருகிக் கொண்டே போகிறது. 
 
பொதுவாகவே தென் மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் இன்றியமையாததாக திகழ்கிறது. ஒன்று சினிமா, மற்றொன்று கிரிக்கெட். 
 
அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை விளமபரப்  படுத்தும்  பணியில் எங்களின் பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. 
 
கிரிக்கெட் விளையாட்டின் முக்கியதுவத்தை  மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ போட்டியில் நாங்கள் இறங்கியுள்ளோம்…”
 
tuti 4
நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய  பல சுதந்திர  போராட்ட வீரர்களின் பிறப்பிடமாக திகழ்வது தூத்துக்குடி மாவட்டம்.  
வீர பாண்டிய  கட்டபொம்மன், பாரதியார், வ. வு. சிதம்பரனார், வாஞ்சிநாதன், புலித் தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் அந்த பட்டியலில் சிலர். 
 
இந்திய விடுதலைக்காக தங்கள் இரத்தம் சிந்தி போராடிய பல சுதந்திர  போராட்ட வீரர்களை நினைவுக்கூறும் விதமாக எங்கள் அணிக்கு ‘பேட்ரியாட்ஸ்’ என்னும் பெயர் சூட்டப்பட்டது.
 
 எங்களின்  ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமல்ல, நெல்லை மாவட்டத்துக்கும் பொதுவானது தான். இந்த மாவட்ட மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள்
tuti 1
அவர்களது ஆதரவை எங்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
 
எங்கள்  ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’  அணியை பற்றிய செய்திகளுக்கும், மேலும் விவரங்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்   எங்களின் @TUTI_PATRIOTS என்னும்  டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம்.”
என்கிறார் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’  அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன். 
இந்த அணிக்கான தீம் சாங் ஆக உருவாகி இருக்கும் ”நம்ம பயலுக மக்கா நம்ம பயலுக ” பாடலை பாடலை பிரபுதேவாவும் இயக்குனர் ஏ எல் விஜய்யும்  வெளியிட்டனர்.
பாடலை இயக்கியதும் விஜய்தான் ஜி வி பிரகாஷ் இசையில் அருண் காமராஜா எழுதிய பாடலை ஒளிப்பதிவு செய்தவர் ஜீவா ஷங்கர் . 
 
tuti 3
பாடலை இயக்கியது சந்தோஷமான விஷயம் என்றார் இயக்குனர் விஜய் 
 
“இந்த பாடலை நான் பல முறை பார்த்து விட்டேன் . சூப்பரா இருக்கு . இது மாதிரி அணியும் ஜெயிக்கணும் ” என்றார் பிரபுதேவா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *