வழக்கறிஞரும் பல சினிமா பிரபலங்களின் நெருங்கிய நண்பருமான ஜெரோம் தனது பெப்பி சினிமாஸ் சார்பில் வழங்க,
படத்தை பற்றி டைரக்டர் கூறும்போது, “கல்லூரியில் படிப்பை முடித்த கதாநாயகனும், கதாநாயகியும் வேலை தேடுகிறார்கள். அப்போது ஒரு பிரச்சினையில் சிக்குகிறார்கள்.
கதாநாயகன், வில்லன் வழியிலேயே சென்று அவனை எதிர்கொள்கிறான்.
அதாவது தீயவனுக்கு தானும் தீயவனாக மாறி அவனை சந்திக்கிறான் . அப்புறம் நடந்தது என்ன? என்பதே கதை
நான் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 2 வில் உதவியாளனாக பணியாற்றினேன். அதற்க்கு முன்னர் விக்னேஷ் சிவனின் போடா போடியில் ஒரு பாடலுக்கு பணியாற்றியுள்ளேன்.
என் நண்பனின் வாயிலாக அஸ்வின் கதை கேட்டு கொண்டிருப்பதை அறிந்து அஸ்வினை சந்தித்து என்னிடம் இருந்த ஒரு வரி கதையினை விவரித்தேன்.
நாங்கள் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினோம்.
இந்த திரைகதையில் அஸ்வினின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே டைட்டிலில் கதை விவாதக் குழுவில் அவர் பெயர் முதன்மையாக இடம்பெறும். இப்படத்திற்க்கு அஸ்வினின் தந்தை தயாரிப்பாளராக இருந்தாலும்
கிட்டத்தட்ட முதல் பிரதி மாதிரி தான் இப்படத்தினை தன் தந்தைக்கு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்து கொடுத்திருக்கிறார் அஸ்வின்
ஆரம்பத்தில் ராஜூ சுந்தரம் மாஸ்டரை வேறொரு கேரக்டருக்குத்தான் அழைத்தேன் அப்புறம் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்குமெனக் கருதி அவரிடம் சொன்னேன்
முதலில் தயக்கம் காட்டியவர் பின்னர் எங்கள் விருப்பப்படி வந்து விட்டார். கண்டிப்பாக அவருக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்குமென நம்புகிறேன்.
படத்தின் நாயகியாக வர்ஷா பணிபுரிந்திருக்கிறார். இதற்க்கும் முன் அவர் சதுரன், வெற்றிவேல் என பணிபுரிந்தாலும், இதில் தனது சிறந்த நடிப்பினை வெளிபடுத்தியுள்ளதாக கருதுகிறேன்
சமீப காலமாக சிறிய பட்ஜெட்டில் உருவான நல்ல தரமான படங்களுக்கு மக்கள் தங்களது ஆதரவை அளித்தே வந்துள்ளனர். அந்த விதத்தில் இப்படத்திற்க்கும் தங்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
அஸ்வின் பேசும்போது ” முதலில் நானும் இயக்குனரும் சேர்ந்து புராஜக்டை டிசைன் செய்தோம் . . தயாரிப்பாளர் தேடினோம் . ஒரு நிலையில் அப்பாவிடம் கேட்கலாம் என்று தோன்றியது.
அவரை அப்பாவாக அணுகாமல் ஒரு தயாரிப்பாளராக புரஃபஷனல் போலவே அணுகினோம். அப்படியே படம் பெற்றோம்” என்கிறார்






