மறைந்த மாபெரும் எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை உலகம்மை என்ற பெயரில் படமா எடுத்து இருக்கிறார்கள் .
கவுரி கிஷன் , மாரிமுத்து மற்றும் பலர நடித்துள்ளனர். சாதிசனம் என்ற படத்தை இயக்கிய ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ் இப்போது விஜய பிரகாஷ் என்ற பெயரில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இவர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு இசை இளையராஜா . போதாதா?
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா பாரதிராஜா ஜமா களைகட்டியது பாரதிராஜா பேசும்போது, ” எனது படங்கள் இவ்வளவு பேசப்பட ராஜாவின் இசையும் காரணம்.அவனது ஒவ்வொரு விரலிலும் ஒரு சரஸ்வதி இருக்கிறாள். நான் நாடகங்களில் நடித்தபோது என்னை வசனம் பேசவே ராஜா விட மாட்டான். என்னை எவ்வளவு வாரி விடனுமோ அவ்வளவு வாரிவிடுவான்..இன்றும் அதைதான் செய்கிறான்.
யார் எழுதிய பாடல் வரிகள் என்றாலும் ராஜா இசை அமைத்தால் அதற்கு உயிர் கிடைக்கும்.. எனது நாடகத்துக்குதா முதன் முதலில் காதல் பாடல் கொடுத்தான். நான் அவன் பாடலை பாடி இருக்கிறேன். ஆனால் நான் பாடினால் எழுந்து ஓடி விடுவான்” என்றார் .
இளையராஜா பேசும்போது, ” அல்லி நகரத்து நாடகங்களில் பாரதி ராஜா மேடையில் நடித்துக் கொண்டு இருப்பார். நான் இசை அமைப்பேன். வலுக்கட்டாயமாக என் சட்டையை வாங்கிப் போட்டுக் கொண்டு நடிப்பார். மறுநாள் அந்த சட்டையை நான் அணிந்து கொண்டு தெருவில் போனால் எல்லோரும் அது பாரதிராஜா சட்டை என்பார்கள் . இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோரும் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்டவர்கள்தான்”என்றார்