பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் வனமகன்

mana 6
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, ஜெயம் ரவி ,  சாயீஷா ஜோடியாக நடிக்க, ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் படம் வனமகன்

அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் . முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

 ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிற  இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

mana 1
“ஏசி ரூம்ல உட்கார்ந்து ஈஸியா பாடல் எழுதிக்  கொடுத்துட்டேன், ஆனா மொத்த டீமும் காட்டுல கஷ்டப்பட்டு பாட்டை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க.
பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் ஒரு மிக முக்கியமான படம்இது . ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களைத்  தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் ,
அவர் படத்தில் வேலை செய்யும் மற்ற கலைஞர்கள் அவர்களின் திறமையை வெவ் வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்றார் மதன் கார்க்கி. 
mana 9
”நான் பெரிய நடிகன், என் படத்தை ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் என நினைத்து எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை.  சின்சியராக நடிப்பது என் வேலை என கதைக்காக மெனக்கெட்டு நடிப்பது இன்னொரு வகை. 
அந்த வகையில் ஜெயம் ரவி ரொம்ப சின்சியரான நடிகர். தேவையில்லாத வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. படத்தில் புலி சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது.
படம் முடியும் போது எல்லோரும் மனநிறைவோடு திருப்தியுடன் வெளியே போவார்கள். தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,
mana 3
தன் சொந்த பணத்தை எந்தவித தயக்கமும் இன்றி செலவு செய்ய நினைத்த இயக்குனர் விஜயின் கலை தாகம் பாராட்டுக்குரியது” என்றார் தனஞ்செயன்.
தம்பி ராமையா பேசும்போது ”மனித உழைப்பை அதிகப்படுத்திய  படம்  வனமகன். மைனா, கும்கி படங்களுக்கு பிறகு ஒரு இடைவெளி விட்டு காடு, மலை, பள்ளத்தாக்கு என அலைந்து திரிந்து செல்போன் சிக்னல்  மறந்து, 
வெளி உலக தொடர்பு மறைந்து நான் நடித்துள்ள படம் இது . ஆதிவாசி மனிதனை மிகவும் நேர்மையான முறையில் சித்தரித்து விஜய் இயக்கியிருக்கிறார்.
mana 9
24 சினிமா துறைகளும் மிகவும் ஆராய்ச்சி செய்து வேலை செய்துள்ள படம்  வனமகன். பழம்பெரும் நடிகர் திலீப் குமார் அவர்களின் மகள் வழி பேத்தி சாயிஷா ஒரு பேரழகி.
அதனால்தான் முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருந்தாலும், அதையும் தாண்டி இதில் இன்னும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்” என்றார். .
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. வனமகன் அப்படி ஒரு படம். ஜெயம் ரவி இல்லாமல் இந்த வனமகன் இல்லை. அபாரமாக உழைத்திருக்கிறார்.
mana 5
தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுமையான நடிகையாக சாயிஷா கிடைத்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த டான்ஸர். சில்வா மாஸ்டரின் சண்டை வடிவமைப்பு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்கும்.
2010லேயே தனஞ்செயனுக்கு இந்த கதை தெரியும். இந்த படத்தை துவக்கும் நேரத்தில் நானும் அந்த படத்தில் இருப்பேன் என தனஞ்செயன் முன் வந்தார்.
வினியோகஸ்தர்கள் தயவு செய்து எல்லா படத்தையும் ஆதரிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட் தான் விலையை நிர்ணயிக்கிறது.
mana 4
நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் பாகுபலி, சங்கமித்ரா மாதிரி படங்கள் வர முடியும். தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களைக்  காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ” என்றார் இயக்குனர் விஜய். 
நாயகன் ஜெயம் ரவி. தன் பேச்சில் “கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால்தான் இந்த படம் உருவாகியிருக்ககிறது.
நான் மட்டும்தான் ஈஸியா வேலை செஞ்சேன்னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்தப்  பொய். அவர் மூளையைக்  கசக்கி கஷ்டப்பட்டுதான் பாட்டு எழுதியிருக்கிறார்.
mana 2
என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க.
இயக்குனர் விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால்தான் இந்தப்  படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக ச்  சொல்லியிருக்கிறது.
கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம்தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க.
mana 8
போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஒடலைனா சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்.
இல்லையில்லை அவரது அடுத்த படத்தின் தயாரிப்பில் நானும் இணைகிறேன் “என்றார்

நிகழ்சசியில் தம்பி ராமையாவின் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது
வரும் ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது வனமகன் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *