தமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’

ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில், 
 
தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க; 
 
முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.
 
இதற்கு முன்பு விளையாட்டுப் பசங்க , வெட்டிப் பசங்க என்ற பெயர்களில் மலேசியத் தமிழ்ப் படங்களை இயக்கி இருக்கும் இவரது மூன்றாவது படம் இது . 
 
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் தினேஷ் குமார்,  இயக்குனர் விமலா பெருமாளின் கணவர் . 
நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி என்பவர் நடித்திருக்க,  தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
 
இவர்கள் மலேசிய தமிழ் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டோரா, குலேபகாவலி ஆகிய படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
 
பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

சமீப காலமாக அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்த கதைப் பின்னணி கொண்ட, 

 இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  திரையிடப்பட்ட முன்னோட்டம் கலாச்சாரம் , காதல் கவர்ச்சி , மசாலா எல்லாம் கலந்து இருந்தது .
 
மலேசியத் தமிழர்களின் கோவில் திருவிழாக் காட்சிகளைக் கொண்ட ஒரு பாடம் அருமையாக இருந்தது . தவிர டூயட் பாடல்களும் சிறப்பாக இருந்தன .
ஜனனி கே பாலு

விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

 நிகழ்ச்சியில் இயக்குநர் விமலா பெருமாள் பேசும்போது, “நாயகன் தேவா தன்  மாமா நடத்தும் இசைக்குழுவில்  நண்பர்களுடன் வேலை செய்து வருகிறான்.
 
தன் காதலி வித்யாவின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்கு சேர்கிறான்.
 
ஆனால், அந்தக் கும்பல்தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களை செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே, 
அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் அந்தக் கும்பலைப் பற்றி தேவாவின் தந்தை ஆசிர்வாதம் எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.
 
அதே நேரத்தில் தேவாவின் முதலாளியை கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத தேவாவை,
 
போகப்போக தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அந்த முதலாளி.
 
வித்யாவின் பிறந்தநாள் அன்று, தேவாவிற்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது.
சங்கீதா கிருஷ்ண சாமி

ஆனாலும், எப்படியாவது வித்யாவை சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற தேவா, முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான்.

 அங்கே எதிர்பாராத விதமாக திவ்யாவிற்கு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது.
 
அதற்கு தேவா தான் காரணம் என காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
 
வித்யாவிற்கு என்ன ஆனது? அவளின் நிலைமைக்கு காரணம் யார்? தேவா முதலாளியை புரிந்து கொண்டானா? தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான்?
                                                                                                                தினேஷ் குமார்

– போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறோம்.” என்றார்

 நடிகர் நாசர் பேசும் போது, “வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள்.
 
இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமாதான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது.
அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும்.
 
இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து, படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம். 
 
முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, 
ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது? என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. 
 
பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த “வெடிகுண்டு பசங்க” வந்திருக்கிறது.” என்றார் 
 
பின்னர் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,“அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த “வெடிகுண்டு பசங்க”படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அதுதான் நடனமாடுவது.
 
இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
 
முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும்.
 
அதே நேரத்தில் அது பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள். 
முறையாக பதிவு செய்யப்பட்ட  படத்தின் தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும்.
 
அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.
 
இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும்.
 
இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த “வெடிகுண்டு பசங்க” வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *