மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷும் விஜயலக்ஷ்மியும் தயாரிக்க, ஹரி கிருஷ்ணன் , ஷீலா ராஜ்குமார் நடிப்பில் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கி இருக்கும் படம் .
கிருஷ்ணகிரி மாவட்டக் கிராமப் பின்னணியில் பாடு பரதேசி அப்பா அம்மாவுக்கு ஒத்தைப் பிள்ளையாகப் பிறந்த வேம்பு ( ஷீலா ராஜ்குமார்) சிறு வயது முதலே சிலம்பக் கலையில் வல்லவள். விட்டால் மாநில , தேசிய அளவில் முன்னேற வாய்ப்புள்ள அந்தப் பிள்ளையை, கிராமத்து பெரிய மனுஷங்க , ‘ பொம்பளைப் புள்ள புகழ் பெறுவதா ?’ என்ற நோக்கில் , ”குடும்பத்துக்கு ஆகுமா?” என்று எல்லாம் அவள் அப்பனிடம் போட்டு விட,ம , அவளது மாமனுக்கு ( ஹரி கிருஷ்ணன்)அவளை திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கின்றனர்.
வேம்புவுக்கு மாமனைப் பிடிக்கும் என்பதால் சிலம்பக் கலையை விட்டு ஒரு குழப்ப நிலையில் மாமனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள்
கல்யாணம் முடிந்த உடன் நடந்த ஒரு விபத்தில் கணவனின் பார்வை பறிபோக, அடுப்படியில் வேகும் விறகாய், ரேஷன் கடைக்கு அலைபாயும் தராசுத் தட்டாய், ,கண்ணிழந்த கணவனுக்கு வேலைக்காரியாய் ஒடுங்கிப் போகிறாள் வேம்பு. . வறுமை மேலும் விரட்ட புகைப்படக்கலைஞராக இருந்த கணவன் மற்றும் அவனது உதவியாளர் சிறுவன் மூலம் புகைப்படக் கலையைக் கற்றுகே கொண்டு கணவனின் போட்டோ ஸ்டுடியோவை எடுத்து நடத்துகிறாள் .
அவள் கற்ற கலைகள் அவளுக்கு உதவியதா? ஆம் எனில் எப்படி ? இல்லை எனில் ஏன் என்பதே படம்
அச்சு அசல் கிராமம் , காடு மலை கரடு பின்புலம் . எளிய முகங்கள் ,
ஆங்கங்கே ஓவர் ஆக்டிங் அல்லது பத்தாத நடிப்பு எட்டிப் பார்த்தாலும், கதாபாத்திரத்தைத் தாங்கும் நடிக்க நடிகையர் .
கதா நாயகியாக நடிக்க சிலம்பம் ஓரளாவது கட்டாயம் தெரிய வேண்டும் எனபதால் நடிக்க ஆட்கள் கம்மி என்ற நிலையில் உற்சாகமாக சிலம்பமாடி தனது அவசியத்தை நிரூபிக்கிறார் ஷீலா . குளோசப் காட்சிகளில் கொஞ்சம் பயமுறுத்தினாலும் கம்பைன்ட் ஷாட்களில் உயிர்ப்புடன் ஜொலிக்கிறார் . லாங் ஷாட்களில் நடக்கும் காட்சிகளில் உடல் மொழிகளில் அசத்துகிறார்
குருடன் நடிப்பில் யதார்த்தத்துக்கும் மேல் துருத்திக் கொண்டு தெரிகிறார் ஹரி கிருஷ்ணன் . நாயகியின் அப்பாவாக ஜெயராவ் இயற்கை போன்ற பாவனையில் படு செயற்கை நடிப்பு
வசனங்கள் குழந்தைத்தனம் .
பாராட்டுக்குரிய டைரக்ஷன்
பெண் குழந்தைகளுக்கு எந்த சூழலிலும் ஒரு தொழிற் கலையும் தற்காப்புக்கலையும் அவசியம் என்பதை சொல்லும் கருத்தியல் கொண்டாடத்தக்கது . வாழ்த்துகள் .. பாராட்டுகள் .
ஆனால் சினிமாவுக்கு நல்ல கதை மட்டும் போதாது . அதை நல்லபடியாக ஈர்க்கும்படி சொல்லும் திரைக்கதையும் மேக்கிங்கும் கட்டாயம் .
அது இல்லாத காரணத்தால் வேம்பு … செழித்த மரமில்லை; சின்னச் செடிதான் .