மையல் @ விமர்சனம்

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல் எல் பி சார்பில் வேணுகோபால், அனுபமா விக்ரம் சிங் இருவரும் தயாரிக்க, மைனா சேது, சம்ரிதி தாரா, பில் தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை திரைக்கதை வசனத்தில் ஏ பி ஜி ஏழுமலை இயக்கி இருக்கும் படம். 

சில்லறைத் திருட்டுகள் செய்து பிழைக்கும் ஒரு நபர் ( மைனா சேது ) ஒருமுறை  திருடிவிட்டு இரவில் தப்பிக்கும்போது காட்டு வழியில் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான்.  மறுநாள் அங்கு வரும் ஓர் இளம்பெண் ( சம்ரிதி தாரா) அவனை கிணற்றில் இருந்து காப்பாற்றுகிறாள் . 

மாய மந்திரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த அவளும் அவளது பாட்டியும்  மட்டுமே காட்டுக்குள் குடிசை போட்டு ஏகாந்தமாக வசிக்கின்றனர் . திருடனுக்கும் பெண்ணுக்கும் காதல் . பாட்டிக்கு ஆரம்பத்தில் அது பிடிக்கவில்லை. 
ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் (பி எல் தேனப்பன்) செய்த சில குற்றங்களில் இருந்து அவரைக் காப்பாற்ற பெரும்தொகையும் அதோடு குற்ற்வாளியாகக் காட்ட ஓர் ஆளும் கேட்கிறார். இன்ஸ்பெக்டர் . 

திருடன் – இளம்பெண் இடையேயான காதலை பாட்டி ஏற்கும் நிலையில் அவனை குற்றவாளியாகக் காட்டி ஜெயிலில் தள்ளி கேஸ் முடிக்க  பணக்கார நபரும் போலீசும் திட்டமிட , நடந்தது என்ன ?

ஏகாந்தமான வெளிகள், பெரும்பாலும் எல்லா காட்சிகளிலும் இரண்டு அல்லது மூன்றே கேரக்டர்கள், நாயகியின் பின்னணி என்று  படத்தின் எளிய மேக்கிங் அழகு . பாட்டியாக வருபவரின் தோற்றம் அருமை . . பாராட்டுகள் இயக்குனர் ஏழுமலை 

அழகான நடிப்பாலும் கொள்ளை கொள்கிறார்  சம்ரிதி தாரா . நயன்தாரா என்று இப்போதே சொல்ல முடியாவிட்டாலும் ஃபைவ்தாரா என்று இப்போதே சொல்லலாம் . மைனா சேதுவும் சின்சியராக நடித்துள்ளார் . 
சேர்வராயன் மலைப்பகுதி லொக்கேஷன், அமர் கீத் இசை , பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பு . 

படத்தின் மிகப் பெரிய மைனஸ் மொக்கையான திரைக்கதையும் காமா சோமா வசனங்களும்தான் . நாயகி பாட்டியின்   மாய மந்திரம் செய்யும் பின்னணியை வைத்து அட்டகாசமான காட்சிகள் எழுதி அசத்தி இருக்கலாம் . ஆனா பேரு வைத்து விட்டு சோறு வைக்காமல் ஏமாற்றி இருக்கிறார் ஜெயமோகன் . பாட்டி சாராயம் குடிக்கும் சுருட்டு புடிக்கும் என்று சொன்னது மட்டுமே போதும் என்பது அவரது நம்பிக்கை . 

கதாநாயகி விசயத்தில் ஒரு நிகழ்வு நடந்த உடனே படம் முடிந்து விட்டது . அதன் பிறகு அந்தப் படம் ஓரிரு நிமிடங்களில் முடிய வேண்டும். அதைப் புரிந்து கொள்ள நிஜமான திரைக்கதை அறிவு வேண்டும் .

ஜெயமோகனுக்கு அது இல்லாததால் நமத்துக் காய்ந்து போன அப்பளத்தை பல்லே இல்லாத நபர் ஊற வைத்து ஊறவைத்து மெல்லுவது போல சவக் சவக் என்று ஓடிக் கொண்டே இருக்கிறது படம் . 

கருத்தியல்  வஞ்சகங்கள் கொண்டவர் என்றாலும்  ஜெயமோகன் திறமையான நாவலாசிரியர் . அவரது கதை ஏதும் பிடித்து இருந்தால் அதை வாங்கிக் கொண்டு அதில் அவர் கொட்டி வைத்து இருக்கும் கசடுகளைக் கழுவி விட்டு சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதை அமைத்து வசனம் எழுதி படமாக்குவதுதான் அறிவுடைமை 

ஜெயமோகனுக்கு என்ன திரைக்கதை தெரியும் . மணிரத்னம் படத்துக்கு வசனம் எழுதுவதே நல்ல திரைக்கதை அறிவுக்கான தகுதியா?

அது புரியாமல் கதை திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் ஜெயமொகனிடமே கொடுத்து விட்டு அவர் ஓ பி அடித்து எழுதிக் கொடுத்ததை ”அப்படியே எடு…”  என்று கண்மூடித்தனமாக இயக்குனரை வாட்டி எடுத்தால் படம் இப்படி தான் மயிலைப் பிடிக்கப் போய் கோட்டான் பிடித்து வந்த கொடுமையாய் மாறும். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *