கோவை பிலிம் மேட்ஸ் சார்பில் தேவா, ஷிவ்ராஜ் ஆர் , முத்து குமார ராஜா ஆகியோர் தயாரிக்க,
கேஜி , அதுல்யா, அனிருத் ஆகியோர் நடிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து , ஷிவ்ராஜ் ஆர் இயக்கி இருக்கும் படம் காதல் கண் கட்டுதே .
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் மாண்டேஜ் மீடியா புரடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுமி பாஸ்கர் மற்றும் கமலக்கண்ணன் .
இந்த கமலக் கண்ணன்தான் மதுபானக் கடை படத்தை எழுதி இயக்கியவர் .
படத்தின் பத்தீர்க்கையாளர் சந்திப்பில் படத்தின் பாடல் ஒன்றையும் முன்னோட்டததையும் திரையிட்டனர் .
இளமையான காதல் கதையாக , அழகான ஒளிப்பதிவில் சுவாரஸ்யமான வசனங்களுடன் படம் இருக்கும் என்பது படத்தின் காட்சிகளில் இருந்து தெரிகிறது .
“கோவையில் இருந்து ஊட்டிக்கு ஒரு டீ குடிக்கப் போவது மாதிரி ….” என்று டிரைலரில் ஒரு வசனம் வருகிறது .
‘படமும் அப்படித்தான் சிம்பிளாக ஆனால் ஜாலியாக இருக்கும்’ என்கிறது படக் குழு .
படக் குழுவை அறிமுகப் படுத்திப் பேசிய கமலக்கண்ணன் “நான் மது பானக்கடை படத்தை எழுதி முடித்த போது அது படமாக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை . அதை சாத்தியப் படுத்தியவர் அண்ணன் சுமி பாஸ்கர் .
அதன் பிறகு நான் மாதம் இருபது படங்களையாவது பார்க்கிறேன் . எல்லோரும் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு தரக் கோருகின்றனர் .
அப்படிதான் சிவராஜும் வந்தான் . நானும் தப்பித்துக் கொண்டே வந்தேன் . ஒரு நிலையில் என்னை பிடித்து விட்டான் .
படம் பார்த்த போது ;அடடா… இந்தப் படத்தை பார்க்க தாமதம் செய்து விட்டோமே’ என்று வருந்தினேன் . இயக்கம் , ஒளிப்பதிவு மட்டும் அல்லாது
எடிட்டிங் , உட்பட அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை படத்துக்குக் கொடுத்துள்ளான் சிவராஜ்
படம் மிக எளிமையான காதல் கதை . ஆனால் நல்ல படம். எனவே இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறோம் .
அடுத்து ஒன்பது குழி சம்பத் படத்தை வாங்கி வெளியிடுகிறோம் . தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிட இருக்கிறோம் ” என்றார்
சிவராஜ் ஆர் தனது பேச்சில் ” கோவையில் நாங்கள் விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தோம் . அப்போது எடுத்த ஒரு குறும்படம்தான் இது .
படத்தைப் பார்த்த என் நண்பன் தேவா, தானே படத்தைத் தயாரிக்க முன் வர, அப்படி ஆரம்பித்தோம் .
பாரம்பரிய மன நிலை கொண்ட ஓர் இளைஞனுக்கும் நவீன சிந்தனை கொண்ட ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதல்தான் இந்தப் படம்
படத்தின் நாயகன் கேஜி நாயகி அதுல்யா இருவருமே எங்கள் விளம்பர நிறுவனத்தின் கஸ்டமர்கள் . குறும்படம் எடுக்க கேமரா வாங்க வந்தவர் கேஜி . அதுல்யாவும் அப்படியே .
படத்தில் பணியாற்றிய எல்லோருமே அசிஸ்டன்ட் டைரக்டர் போல வேலை செய்தனர் . அதுல்யா கூட படப்பிடிப்பு உபகரணங்களை சுமந்து கொண்டு வருவார் .” என்றார் .