மெட்ராஸ் என்ற பெயரில் வடசென்னையை மையமாக வைத்து வந்த படம் அதன் இயக்குனர் பா. ரஞ்சித்தை ரஜினிவரை கொண்டு போய் இருக்கிறது.
அதன் பாதிப்போ என்னவோ வடசென்னையில் ஒரு முக்கிய இடமான வியாசர்பாடி என்ற பெயரிலேயே படம் ஒன்று வருகிறது

இந்தப் படத்தில் ஹீரோவாக சுரேஷ் அறிமுகமாக, ஹீரோயினாக மீரா அறிமுகமாகிறார். மற்றொரு ஹீரோவாக தனுஷ் ராஜ்குமார் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குபவரும் இவரே இவர்களுடன் பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகியோர் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.
மேலும், கிருஷ்ணகிரி ருக்கு, சின்னாளப்பட்டி சுஜி ஆகியோர் வில்லிகளாக நடிக்கிறார்கள். ஆயுஷி திவாரி என்ற மும்பை நடிகையும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்கள்.
“ஒரு ரவுடியால் பாதிக்கப்படும் நான்கு வாலிபர்கள், அந்த ரவுடியை எதிர்க்கொண்டு, அவரால் பாதிக்கபப்ட்ட ஒரு ஏரியாவை காப்பாற்றி, அந்ப் பகுதி சிறுவர்களுக்கு கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதனால் வரும் எதிர்ப்புகளும், அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் ‘வியாசர்பாடி’ படத்தின் கதை.

