யாக்கை @ விமர்சனம்

Krishna, Swathi in Yaakkai Movie Stills
ப்ரிம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக் குமரன் தயாரிக்க, கிருஷ்ணா, சுவாதி , பிரகாஷ் ராஜ், ராதா ரவி, சோம சுந்தரம் ஆகியோர் நடிக்க,

ஆண்மை தவறேல் என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் , தனது இரண்டாவது படமாக இயக்கி இருக்கும் படம் யாக்கை .

யாக்கை என்றால் உயிருள்ள உடம்பு என்று பொருள். இந்தப் படம் உயிருள்ள படமா ? பார்க்கலாம்

ஒரு பிரபல மருத்துவ மனையின் உரிமையாளரான டாக்டர் கிருஷ்ண மூர்த்தி (ராதாரவி) , தனது மருத்துவமனையின் மொட்டை மாடியில் இருந்து காரில் இருந்து தள்ளப்பட்டுக் கொல்லப் படுகிறார் .

 

வழக்கை விசாரிக்க வருகிறார் விசாரணை அதிகாரி சகாயம் ( பிரகாஷ் ராஜ்) . அவரது உதவியாளர் முனியப்பன் (சிங்கம் புலி) .

yaa 4

கிருஷ்ணா மூர்த்தியின் மகனும் அயல்நாடு வாழ் இந்தியருமான ஸ்ரீராம் (சோம சுந்தரம்) அப்பாவின் மரணத்தை கொண்டாடும் நபராக இருக்க, அவன் மீதே போலீசுக்கு சந்தேகம் வலுக்கிறது .

இன்னொரு பக்கம் புகைப்படக்காரர் தயாளனின் ( எம் எஸ் பாஸ்கர்) மகனும் கல்லூரி மாணவனுமான கதிருக்கும் (கிருஷ்ணா) ,

அதே கல்லூரி மாணவியும் , பேச்சு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் சேவை செய்பவளும் ரத்த தானத்தில் மிக ஆர்வம் கொண்டவளுமான கவிதாவுக்கும்  (சுவாதி) மோதல் அப்புறம் காதல் .

ரத்த வகைகளான ஏ , பி , ஓ போன்றவை அல்லாது, ஹெச் குரூப் என்றும் பாம்பே பிளட் என்று அறியப்படும் மிக அரிதான ரத்த வகை பெற்றவள் கவிதா

yaa 3

கவிதா — கதிர் காதல் கல்யாணத்தை நோக்கி முன்னேறும் வேளையில் ஒரு விபரீதம் நடக்கிறது . அதன் வேர் ஒரு குற்றத்தில் இருக்கிறது . அதன் பிறகு கவிதா , கதிருக்கு நடந்தது என்ன? என்பதே இந்த யாக்கை .

வெகு நிதானமான கேமரா நகர்வுகளோடு நீண்ட ஷாட்களை அழகாக வைக்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்  .

சின்ன சின்ன காட்சிகளை கூட அழுத்தமாக விவரணையாகச் சொல்கிறார் . நல்ல லொக்கேஷன்கள் கேமரா கோணங்கள் என்று தேர்வு செய்து காட்சிப்படுத்துகிறார்

பேச்சு மாற்றுத் திறனாளிகளின் தேசிய கீதம் காட்சி அருமை . இப்படி ஓரிரு இடங்களில் வித்தியாசமான விசயங்களை தேடிப் போயிருப்பது சபாஷ் போட வைக்கிறது

yaa 1

கேமரா மேன் சத்யா பொன்மார் இயக்குனருக்கு  பெரிதாக உதவுகிறார் . பின்னணி இசை நன்றாக இருக்கிறது

கிருஷ்ணா  மிக உற்சாகமாக வருகிறார் . சில இடங்களில்  அதீத உற்சாகம் செயற்கையாக இருக்கிறது . ஒரு இடைவேளைக்குப் பிறகு சுவாதி தெத்துப் பல் சிரிப்போடு வளைய வருகிறார் .

விசாரணை அதிகாரியாக படம் முழுக்க, தனக்கே உரிய மேனரிசங்களோடு வருகிறார் பிரகாஷ் ராஜ் .
இதுவரை கிராமத்து , ஏழை மனிதராகவே நடித்த சோம சுந்தரம் , இதில் அயல்நாடு வாழ் இந்தியராக வருகிறார் .

இப்படி எல்லோரும் வருகிறார்களே தவிர , நின்று விளையாடக் காணோம் . காரணம், மிக பலவீனமான திரைக்கதை.

yaa 2

அணு அணுவாக கேமரா நகரும் ஷாட்களின் நீளமும் , நிதானமும் வளரும் கால அளவும் படத்தின் ஆரம்பக் காட்சிக்கு ஒகே . எல்லா இடத்திலும் கேமரா அதே வேகத்தில் போனால் எப்படி?

நகை வாங்கக் கதிர் போராடும் ஓரிரு காட்சிகள் தவிர கதிர் கவிதா காதல் கட்சிகளில் சுவாரஸ்யம் பெரிதாக இல்லை . இடைவேளை டுவிஸ்ட்டை முன்னரே ஊகிக்க முடிவதால்  பெரிதாக அதிர்ச்சி தரவில்லை.

பாம்பே பிளட் என்பது வெகுஜன மக்கள் அறியாத விஷயம் . அது பற்றி தெளிவாக அழுத்தமாக வெகு ஜன ரசிகனுக்கு விளக்க வேண்டாமா ?

yaa 5

கடைசிக் காட்சிகளை மிக அழகாக இயக்கி இருக்கிறார் குழந்தை வேலப்பன் . ஆனால் அவை எத்தனையோ படங்களில் பார்த்து சலித்த காட்சிகளே என்பதால் பெரிதாக பாதிக்கவில்லை

மொத்தத்தில் யாக்கை….. கவலைக்கிடம் !.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *