உலக அளவில், ஹோட்டல் துறைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் ‘நிறுவனம் ரோச் ஸ்டோன்’ (Rochestone) .
இந்த நிறுவனம்த் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூங்குட்டி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு விருது வழங்கியுள்ளது.
பொதுவாக பல விருதுகளுக்கெல்லாம், சம்மந்தப்பட்டவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பிவைப்பார்கள் அல்லது விருது போட்டியில் பணம் செலுத்தி பங்கேற்பார்கள் ,
ஆனால், இந்த விருதைப் பொருத்தவரை ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனமே நேரடியாக சம்மந்தப்படவர்களின் படைப்பை பார்த்து விருது வழங்கி வருகிறது.
அப்படி, ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தமிழில் வந்த ‘ஜூரோ’ படத்தைப் பார்க்க படத்தின் மேக்கிங், கதைக்களம் ஆகியவற்றைப் பார்த்து வியந்தவர்,
ஜீரோவுக்கு மதிப்புக் கூட்ட முடிவு செய்து படத்தின் இயக்குனர் இயக்குநர் ஷிவ் மோஹாவுக்கு ‘ரோச்செஸ்டான்’ விருதை வழங்கியுள்ளார்..
திரைப்பட இயக்குநர்களில் இவ்விருது பெரும் முதல் நபர் ஷிவ் மோஹா என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிக் கூறும் இயக்குனர் ஷிவ் மோஹா ” படத்தை ஒரு கதையாக பிறரிடம் சொல்வதே கடினம், அந்த அளவுக்கு படத்தில் விஷுவலாக சொல்ல வேண்டிய விஷயங்கள் தான் அதிகம்,
அதற்காக ஒவ்வொரு காட்சியையும் நாங்கள், ஸ்டோரி போர்டாக தயார் செய்து, அதை தயாரிப்பாளரிடம் காட்டி சம்மதம் வாங்கினோம்.
மேலும் படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக ரொம்பவே மெனக்கெட்டோம், அதற்கான பலன் படத்தில் கிடைத்தது.
இப்படி பலவிதத்தில், ‘ஜீரோ’ படத்திற்காக நான் உள்ளிட்ட படக்குழுவினர் உழைத்திருந்தோம்,” என்றார் .
“இப்படி உழைத்த உங்களுக்கு, அதற்கான அங்கீகாரம் கிடைத்ததா?” என்று கேட்டபோது ” சில ரசிகர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்,
இதுபோன்ற வித்தியாசமான படங்களை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது.
மேலும், ‘ரோச்செஸ்டான்’ (Rochestone) போன்ற நிறுவனங்களின் அங்கீகாரமும், அவர்கள் எனக்கு வழங்கிய கெளரவமும் எனது ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது.
எனவே, ‘ஜீரோ’ படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை எடுக்க இருக்கிறேன். முன்பே இதற்கான திரைக்கதையை நான் எழுதி வைத்திருக்கிறேன்,” என்கிறார் .
(அப்போ அந்த படங்களுக்கு முறையே ஒண்ணு ரெண்டு ன்னு பேரு வச்சிடுங்க ஷிவ் மோஹா !)
ஆனால் அதற்கும் முன்பாக வேறு ஒரு படத்தை இயக்க இருக்கிறார். க்ரைம் திரில்லர் படமான இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார்.
பொறியியல் பட்டதாரியான ஷிவ் மோகா, லயோலா கல்லூரியில் சினிமா தொழில்நுட்பம் படித்தவர. , ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆல்பங்கள் (வந்தே ஏ ஏ ஏ மாதரம் )
மற்றும் தனுஷ் நடித்த ’மாரி’ ஆகியவற்றை இயக்கிய இயக்கிய பாரத் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
வாழ்த்துகள் ஷிவ் மோஹா . ஜீரோ படம் பார்த்த போது திரைக்கதை விசயத்தில் நான் உங்களிடம் சொன்ன சில விசயங்களை நினைவில் வைத்து படம் பண்ணுங்கள் வெகு ஜன மக்களையும் சேர்த்தே கவர அதுவே வழி
ஜீரோ படத்துக்கு நாம் எழுதி இருந்த விமர்சனம் படிக்க பயன்படுத்தும்
https://wh1026973.ispot.cc/zero-mociue-review/