அஜித்தின் வேதாளம் படத்தின் கதை

vedhalam 1
அஜித் ரொம்ப சாதுவான கார் டிரைவர். தங்கை லட்சுமி மேனன் மீது அதிக பாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமி மேனனுக்கு 
கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ‘ஸ்காலர்ஷிப்’ அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காகத்  தங்கையுடன் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறார் அஜித். 
அங்கு சர்வதேச அளவில் கடத்தல் உட்பட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.  லட்சுமி மேனனின் கல்லூரித் தோழியாக வரும் ஸ்ருதிஹாசன், அஜித்தை  காதலிக்கத்  தொடங்குகிறார்.
இதற்கிடையே,  ஒரு சின்ன மோதலைத் தொடர்ந்து , அஜித் ஓட்டும் கால் டாக்சியில் கபீர்சிங்கின் ஆட்கள்  போதைமருந்தை வைக்க, அதை  
போலீஸிடம் ஒப்படைக்கிறார் அப்பாவி அஜித். இந்த விவகாரம் மீடியா மூலம்பெரிதாகி, போலீஸார் கபீர்சிங்கின் ஆட்களைக் கைது செய்கிறார்கள் . 
இதனால் கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லட்சுமி மேனன் மீதும் திரும்புகிறது. 
தொடரும் தாக்குதல் சம்பங்களில் லட்சு மேனன் கொல்லப் பட, 

vedhalam 2
அஜித்தால் நடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், 
அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார். 
மருத்துவமனையில் அஜித்துக்கு விபரீத அனுபவங்கள் ஏற்படுகிறது. அவர் ஒரு ‘ஆவி’ யை சந்திக்கிறார். அது… அஜித் ‘நெம்பர் 2’. 

vedhalam 4
அப்பாவி  அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி அதிரடி அஜித்தாக இருக்கிறார், 'கெத்து' என்ற பட்டப் பெயரோடு ! அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின். 
ஊரில் பெரும் புள்ளியும் பார்வையற்றவருமான  தம்பி ராமையாவைப் பாதுக்காகிறது இந்த அணி. தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள், இருக்கும் வரை அவரை நெருங்கமுடியாது என உணர்ந்து, ‘கெத்து’அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடூரமாக வீழ்த்துகிறார்கள். 
ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார் அப்பாவி அஜித். அப்படியே அப்பாவி  அஜித்தின் உடலுக்குள் கெத்து     அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, பரபர பழிவாங்கும் படலம் !
முதலில் லோக்கல் எதிரிகளை முடித்துவிட்டு,கொல்காத்தா, தாய்லாந்து எனபறக்கிறார்கள் அஜித். அங்கே  
‘வேதாளவேட்டை’ என்ன என்பது மீதிக்கதை.
அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி, ‘வேதாள’ அஜித் பழிவாங்கினால்… கேட்க வேண்டுமா? 
vedhaalam 3
கெத்து அஜித், ரசிகர் ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் பொதுமக்களுக்காகவாம் 
எல்லா எதிரிகளையும் முடித்த பின், அவ்வளவு தான் ஸ்ருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது
வேதாளம்,  வேறு ஒரு அசைன்மெண்டுக்கு.
மீண்டும்…….ஆரம்பம் என்பதோடு படம் முடிவடைகிறதாம்.
பேசாம டாக்சி டிரைவருக்கு விக்கிரமாதித்தன் அல்லது சுருக்காம விக்ரம்னு பேரு வச்சிடுங்க . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →