கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் சமந்தாவின் சதையை நம்பி எடுக்கப்பட்ட அஞ்சான் திரைப்படத்துக்கு…சென்னையில் தணிக்கைக்கு விண்ணப்பித்தால் ‘யூ சர்டிபிகேட் கிடைக்காது . ஏ கொடுத்து விடுவார்கள்’ என்ற காரணத்தால் …
மும்பையில் தணிக்கை செய்து யூ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய அஞ்சான் படக் குழு , அப்படியே மும்பையில் தணிக்கைக்கு விண்ணப்பித்தது.
காரணம் ?

ஆபாச விசயத்தில் மும்பை தணிக்கைக் குழு கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்ளும் .
தவிர தமிழ் நாட்டின் கலாச்சாரம் குறித்து மும்பைக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், கொஞ்சம் அப்படி இப்படி சிக்கல் வர வாய்ப்புள்ள தமிழ்ப் படங்களை மும்பைக்கு கொண்டு போய் தணிக்கை செய்வது நம்ம ஆட்கள் வழக்கம்தான்.
அதன்படியேதான் அஞ்சான் படத்தில் சமந்தா ஆபாசத்தின் எல்லையை தொட்டு இருந்தாலும், மும்பையில் தணிக்கை செய்து அதற்கு யூ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக திரும்பியது அஞ்சான் படக் குழு
அஞ்சான் படம் வெளியாகி சரியாக மூன்று நாள் ஆன நிலையில் ஆகஸ்டு பதினெட்டாம் தேதி, மும்பையில் அந்த விவாகரக் குண்டு வெடித்தது.

இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சம்மந்தப்பட்ட ராகேஷுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் பட்டியலில் அஞ்சான் படத் தயாரிப்பு நிறுவனமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இருக்கிறது என்பதுதான் நம்மூரு சேதி .
கைது செய்யப்பட ராகேஷ் குமார் அஞ்சான் படத்தைப் பார்த்த உடன் விசயத்தை புரிந்து கொண்டார் .
ஆபாசம் மற்றும் வன்முறை காரணமாக இந்தப் படத்துக்கு தமிழ் நாட்டில் யூ சான்றிதழ் கிடைக்காது என்பதால் , மும்பை வந்து அந்த யூ சான்றிதழை வாங்கிப் போக முயல்கிறார்கள் என்பதுதான் அந்த விஷயம் .
எனவே அவர் தணிக்கை செய்வதை தள்ளி வைத்து இருக்கிறார்.
அப்புறம் அஞ்சான் தயாரிப்பாளர் தரப்பில் பேரம் பேசப்பட, ஒரு விலை உயர்ந்த லேப் டாப் மற்றும் ஒரு ஐ பேடு லஞ்சமாக ராகேஷ் குமாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு படக் குழு ஆசைப்பட்டபடி யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார் ராகேஷ் குமார்
இதையெல்லாம் கூறும் சி பி ஐ அதிகாரிகள் “அஞ்சான் படத்தின் தெலுங்கு வடிவமான சிக்கந்தர் படத்துக்கு யூ சர்டிபிகேட் கொடுக்கவும் ராகேஷ் குமாருக்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஐம்பது ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து இருக்கிறது “என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இதை அடுத்து யூ சர்டிபிகேட் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமியிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது .
இது ஒருபுறமிருக்க அஞ்சான் படத்தை வைத்து சொல்லி ச பைனான்சியர்களிடம் பல கோடிகளை வாங்கி அந்தப் பணத்தில் தான் உத்தமவில்லன் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். அஞ்சான் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பதால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் பணத்தை திருப்பிகேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சி.பி.ஐ.யிடம் வசமாக சிக்கியுள்ளார் லிங்கு. தனி மரமாக சிக்கிக்கொண்ட லிங்குசாமி, ‘எந்த நேரத்திலும் சி.பி.ஐ. தன்னை கைது செய்யலாம்’ என்பதால் பயத்தில் மிரண்டு போய் உள்ளாராம்
சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுக்க திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் முயன்று வருவதாக ஒரு தகவல் .
உண்மையில் இந்த வழக்கில் யூடிவி நிறுவனமும் சிக்கி இருக்க வேண்டியது.
ஆரம்பத்தில் அஞ்சான் படத்தின் தயாரிப்பில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து யூ டிவியும் ஈடுபட்டது .
கடைசியில் படத்துடன் யூ டிவி தனஞ்செயன் மும்பை சென்று யூ டிவி நிறுவன மேலதிகாரிகளுக்கு படத்தை போட்டுக் காட்ட ,
” நாம் இந்தப் படத்தின் வியாபரத்தில் ஈடுபடும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது ? பதினைந்து வருடம் முன்பே இது மாதிரி பல படங்களை எல்லாரும் மென்று துப்பியாகி விட்டது. என்ன செய்வீர்களோ தெரியாது . படத்தை திருப்பதி பிரதர்சிடமே கொடுத்து விட வேண்டும் ” என்று அந்த யூ டிவி மேலதிகாரிகள் கடுப்படிக்க ,
அப்படியே செய்து தப்பித்துக் கொண்டார் தனஞ்செயன் .
தவிர யூடிவிக்கு தெரியாமல் அஞ்சான் படத்தின் தெலுங்கு உரிமையை அடமானம் வைத்து லிங்குசாமி கடன் பெற்ற விஷயமும் யூடிவி, லிங்குவின் டீலிங்கை முடித்துக் கொள்ள காரணமாகிவிட்டது.
எனவே அஞ்சான் படம் திருப்பதி பிரதர்ஸ் மூலமாக அவர்கள் மூலம் மட்டுமே தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
இப்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது யூ சர்டிபிகேட் வாங்க லஞ்சம் கொடுத்த செய்தி வெளியாகி உள்ளது.
லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பது உண்மையானால் ….
லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் .