அரசியல்வாதிகள் கையில் தியேட்டர் உரிமையாளர்கள். – இது ‘அர்த்தநாரி’ அதிரடி !

artha 1

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் தயாரித்து ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுத, ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க,

இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும்ம் படம் அர்த்தநாரி .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்  எஸ் ஆர் எம் கல்விக் குழுமம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரான பாரி வேந்தர் பச்சைமுத்து பாடல்களை வெளியிட ,
artha 5
மைக்ரோசாப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஆகியோர்  பெற்றுக் கொண்டார்கள் . 
படத்தின் இரண்டு டூயட் பாடல்களை திரையிட்டார்கள் . படத்தின் முன்னோட்டம் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . 
நாயகன் ராம்குமார் பேசும்போது ” அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜய சாந்தியாக அவர் வருவார் ” என்றார் .
அருந்ததி
artha 6
“இந்தப் படத்துக்காக நிறைய ஹோம் வொர்க் செய்தேன். நிறைய பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன்  அவை மிகவும் கடினமாக  இருந்தன .
ஆனால் படம் சிறப்பாக வந்திருப்பதைப் பார்க்கும்போது அந்தக் கஷ்டம் எல்லாம் பறந்து விட்டது ” என்றார் .
கோவைத் தம்பி தன் பேச்சில் “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் , அப்புறம் நடிக நடிகையர்கள் , அப்புறம் இயக்குனர்கள் கையில் இருந்தது . இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது .
artha 2
அது கூட தப்பில்லை . ஆனால் அந்தத் திரையாங்கு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறார்கள் . இது மாறும்வரை தமிழ் சினிமா நல்ல நிலைக்கு வராது ” என்றார் .
நாசர் பேசும்போது “இங்கே திரையிடப்பட்ட பாடல்களால்  இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும்,
இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு ஸ்ட்ராங்கான கதை உண்டு .அது இந்தப் படத்துக்கு உதவும் . 
artha 4
இயக்குனர்கள் சங்கத்துக்கு பாரி வேந்தர் தனது குழும மருத்துவமனைகள் மூலம் செய்யும் உதவிகளை நடிகர் சங்கத்துக்கும் செய்ய வேண்டும் ” என்றார் .
பாரி வேந்தர் தன் பேச்சில்  ” என்னோடு எப்போதும் உடன் இருக்கும் முத்தமிழ் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான் .
படத்தில் நல்ல கதை இருக்கிறது .
artha 3
அவர் இந்தப் படத்தில் வெற்றி பெற்று நிறைய படங்களை எடுக்க வேண்டும் ” என்றார் . 
தற்கொலை செய்து கொண்டு செத்துப் போன பெண் டி எஸ் பி விஷ்ணு ப்ரியா போல , பெண் போலீசாருக்கு இருக்கும் அழுத்தங்கள் தொந்தாவுகள் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது என்கிறார் இயக்குனர் சுந்தர இளங்கோவன் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →