ரவுடியின் கதையை அனுமதி வாங்கி எடுத்த ‘இமை’

கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்க, புதுமுகங்கள்  சரிஷ்,  அக்ஷயப்பிரியா இணையராக நடிக்க, 
 
 விஜய் கே. மோகன்  என்பவர் முழுநீள காதல் கதையாக  எழுதி இயக்கி இருக்கும்  படம் இமை 
 
 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், முன்னிலையில்  பாடல்கள் வெளியிடப் பட்டன. 
 
நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய் கே. மோகன் பேசும் போது.  “நான் ரயிலில் பயணம் செய்த போது ஒருவர் என் எதிர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
 
அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். ஊர் கோயமுத்தூர் என்றார்.என்ன வேலை பார்க்கிறீர்கள் என்ற போது ரவுடியாக இருக்கிறேன் என்றார் .
 
அவர் ஒரு ரவுடி  என்றதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை .  அவரிடம் சற்றுநேரம் பேசினேன்.
 
நல்ல கதை இருக்கும் போல் தோன்றியது. அவரது போன் நம்பரைக் கேட்டேன். கொடுத்தார்.  ஊர் வந்ததும் இறங்கிக் கொண்டார்.
 
அவரைத் தொடர்பு கொண்டு  நேரில் சந்தித்து பேசினேன். அவருக்கு ஒரு காதல் இருந்தது தெரிந்தது. அவரிடம் விரிவாகப் பேசினேன்.
 
அவரது கதையைப் படமாக எடுக்க விரும்புகிறேன் என்று அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார். அவரது கதையைத் திரைக்கதையாக மாற்றி மறுபடியும் கூறினேன்.
 
கிளைமாக்ஸ்  மாறியுள்ளதே என்றார். சினிமாவுக்காக மாற்றங்கள் செய்திருப்பதையும் சொன்னேன். 
 
அப்படி உருவான கதைதான் இமை. இப்படத்தில் நாயகனாக நடிக்க சரிஷ் கிடைத்தார் அவர் 15 ஆண்டுகளாக நடிக்கப் போராடி வருபவர். அவர் மூலம் தயாரிப்பாளர் கிடைத்தார்.
 
அவர் குஜராத்திக்காரர். எங்களை நம்பி தயாரிக்க முன் வந்தார். நாயகி அக்ஷயா, சில கன்னடப் படங்களில் நடித்தவர்.  வரும் அக்டோபர் மாதம்  படம் வெளியாகவுள்ளது.
எவ்வளவோ படங்கள் வரலாம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப் பட்டு இருப்பதால் எங்கள் படத்துக்கு கூடுதல் பலமும் நம்பிக்கையும் உள்ளன.” என்றார் 
 
நாயகன் சரிஷ் பேசும் போது, “எனக்கு நடிக்க ஆசை, கனவு, லட்சியம் எல்லாமும் இருந்தன. சரியான வாய்ப்பு தேடியபோது,
 
 இயக்குநர் விஜய் கே. மோகன் சொன்ன கதை பிடித்து இருந்தது.  படம் முடிந்து விட்டது. இதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன.
 
அனைவருக்கும் பிடிக்கும் படமாக  ‘இமை’  இருக்கும்.” என்றார்.
 
நாயகி அக்ஷயப்பிரியா பேசும்போது, ” தமிழில் இது எனக்கு முதல்படம் .நல்ல கதையம்சம் உள்ள படம் இது. இதில் எனக்கு முரட்டு சுபாவமும்,ரவுடித்தனமும் கொண்ட,
 
 ரவுடியை துரத்தித்துரத்திக் காதலிக்கும் பெண் பாத்திரம்  . தமிழில்முதல் படவாய்ப்பு தான் இது என்றாலும்,
 
எனக்கு ஏதோ பிக்னிக் போய் வந்தது போல  படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. .
 
 படப்பிடிப்பில் எல்லாரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். படக்குழுவினர் என் சௌகரியம் முக்கியம் என்பதை,
 
 உணர்ந்து  நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி  ” என்றார். 
 
பாடலாசிரியர் சீர்காழி சிற்பிபேசும்போது,
 
 “நான் இதுவரை ‘மகான் கணக்கு’ ,’வனபத்ரகாளி’ ,’ஓநாய்கள் ஜாக்கிரதை’ ,’செம்பட்டை’ , ‘கெத்து’ போன்ற 25 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன்.
 
‘கெத்து’படத்தில் நான்எ ழுதிய ‘தில்லுமுல்லு பண்ணலை’ பாடல் சூப்பர் ஹிட் . ‘இமை ‘படத்தில் நான் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
 
‘வால் முளச்ச பொண்ணு பிளேடு வச்ச கண்ணு ‘, ‘காதல் வந்தால்’, ‘ விழிகள் மூடும்போது ‘ என்று ஆரம்பிக்கும்   இப்பாடல்கள் எல்லாமே நன்றாக வந்துள்ளன. 
 
படமும் எல்லாரையும் கவரும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும்” என்றார்.
 
விழாவில்  ஒளிப்பதிவாளர்  வி ,கே,பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில்,ஆதிப் , நடிகர் வெற்றிவேல் ஆகியோரும் பேசினர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *