முக்கிய கதாபாத்திரத்தில் K.பாக்கியராஜ், பொன்வண்ணன் இருவரும் நடிக்க ,
கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.
மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.
”பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இதனாலேயே இந்தியாவை வியப்போடு பார்க்கிறார்கள்.
அப்படி இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்குதான் உண்டு.
அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம், அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி
அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்… இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும்
இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது ” என்கிறது படக் குழு
இந்தப் படத்துக்காக 5 பாடல்கள் இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர், மேலப்பூங்குடி, குற்றாலம், கொடைக்கானல், சொக்கலிங்கபுரம், சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் வெளியீடு சென்னையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது
நடிகர் ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொள்ள சென்ற வாரம் நடந்தது
அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது .
திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
நீதியரசர் M V முரளிதரன் , கலைப்புலி எஸ் தாணு இசையமைப்பாளர் யு.கே.முரளி, பாடலாசிரியர் பிரியன் ,பட இயக்குனர் ஜிப்சி N.ராஜ்குமார், தயாரிப்பாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்






