ஆர்.டி. இன்ஃபினிடி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்க,
சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ருஹி சிங் நடிக்க,
இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன்,மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்க,
பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய தாஜ் , கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் போங்கு
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரைலர் கமர்ஷியல் கதகளியாக இருந்தது . ஒரு வேளை இது இன்னொரு சதுரங்க வேட்டையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .
”ஏழைங்க என்னைக்கும் பணக்காரனைப் பத்தியே நினைச்சுட்டு இருப்பாங்க. ஆனா பணக்காரன் ஏழையைப் பத்தி நினைக்க மாட்டான் ” என்பது போன்ற வசனங்களிலும் சதுரங்க வேட்டை வாசனை .
நட்டி முன்னிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருப்பது டிரைலரிலேயே தெரிந்தது.
பாடல்களில் புதுப் பரிமாணம் எடுக்கும் ஸ்ரீ(காந்த் தேவா) யின் முயற்சி தெரிந்தது.
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சங்கத்துக்கான நூலகம் அமைக்கும் பணிக்கு
வித்திடும் முக்கிய நிகழ்வாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது
நிகழ்ச்சியில் பேசிய நட்டி ” இயக்குனர் சொன்ன கதை மிக சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக படத்தை தயாரித்து இருக்கிறார்கள் .
படத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி ” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பார்த்திபன், லிங்குசாமி, விஜய் மில்டன் ஆகியோர் நட்டியையும் சதுரங்க வேட்டை படத்தில் அவரது பங்களிப்பையும் பாராட்டிப் பேசினார்
இயக்குனர் தாஜ் பேசும்போது “எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாவது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நவீனமாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.
குற்றங்களுக்கான ஆனிவேர் எது ? யார்? என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களைக் கொண்டு அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.
அப்படித்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார் யாரால் ? எப்படி திருடப் படுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதையாக ஆக்கி இருக்கீறோம்
காஸ்ட் லியான கார் பற்றிய கதையை காஸ்ட்லியாக செலவு செய்து படமாக்கி இருக்கிறோம்.
ஒரு புதிய இயக்குனருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக் கொண்ட தாயாரிப் பாளர்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுளேன்” என்றார்