நல்லக்கண்ணு அய்யாவின் பாராட்டில் ஜோக்கர்

nalla 3

ஜோக்கர் படத்தின் வெற்றி விழாவில் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு அய்யா  ,நடிகர் சிவகுமார், எடிட்டர் மோகன் , இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு  வாழ்த்தினர் 

அதிலும்  உத்தமத் தலைவர் நல்லகண்ணு அய்யா  கலந்து கொண்டதன் மூலம் அந்த விழாவே புனிதம் பெற்றது என்று சொல்லலாம் . 
நிகழ்ச்சியில் பேசிய நல்லகண்ணு அய்யா  ” முதலில் இந்த ஜோக்கர் படத்தை  நான் ஏதோ  காமெடி படம் என்றே நினைத்தேன் . படம் பார்த்த பிறகுதான் இது மக்கள் சினிமா என்பது புரிந்தது  
nalla 5
கபாலி படத்துக்கு நேர் எதிராக இந்தப் படத்துக்கு கிடைத்து இருக்கும் பூங்கொத்து  மகிழ்வை தருகிறது  இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெளியே வந்துள்ளது . ஆச்சர்யமான விஷயம். 
நாங்கள் அரசியலில் பல கஷ்டங்களைப் பார்த்து இருக்கிறோம் . எனவே இது போன்ற  படங்களைப் பார்த்தால்  எங்களுக்கு கண்ணீர் எல்லாம் வராது . 
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து நான் , வீரமணி , ஜி.,ராமகிருஷணன் எல்லோரும் அழுது விட்டோம் 
nalla 1
சில வருடங்களுக்கு முன்பு  மாபெரும் படைப்பாளி கே .ஏ. அப்பாஸ் அவர்களின் செஹர் அவுர் சப்னா படத்தை நெல்லையில் திரையிட்டோம் . அதுவும் இது போல மக்கள் வாழ்க்கையை சொல்லும் படம்தான். 
ஆனால் அந்தப் படத்தை பார்த்த நெல்லை மக்கள் ”இந்தக் கஷ்டததைதான் நாங்கள் வாழ்வில் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே .
அப்புறம் அதை எதற்கு சினிமாவில் பார்க்க வேண்டும்/’ என்று கேட்டார்கள் . நொந்து போனோம் . 
nalla 2
ஆனால் ஜோக்கர்  படத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவை கொடுத்து இருப்பது சந்தோஷமான விஷயம் . 
அதற்குக் காரணம் ஊடகங்கள் இந்தப் படத்துக்கு கொடுத்த அதரவு . அதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . 
சிவகுமார் , மோகன், லிங்குசாமி போன்றவர்களோடு இந்த மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . 
nalla 4
இப்படி ஒரு நல்ல படத்துக்கு பணம் போட்டு எடுத்த தயாரிப்பாளர் பிரபுவுக்கு நன்றி . 
இப்படி ஒரு அற்புதமான படத்தை  எழுதி இயக்கிய ராஜு முருகனுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் . . 
இவர் தொடர்ந்து  ,இது போன்ற நல்ல படங்களை எடுக்க வேண்டும் ” என்று தனக்கே உரிய மென்மையான  குரலில் கண்ணியமான மொழியில் தன்மையான விதத்தில் பேசினார்  அய்யா 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *