ஐ பி எல் என்ற பெயரில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட நவீனத் தன்மை , அடுத்த கட்டமாக கால்பந்து விளையாட்டுக்கு வந்து இப்போது பேட்மிண்ட்டன் விளையாட்டுக்கும் வந்து உள்ளது . இந்த நவீனத்தால் ஒரு வகையில் விளையாட்டின் தரம் கொஞ்சம் குறைந்தாலும் மறுபக்கம் விளையாட்டு பிரபலமாகவும் ஆவதால், அதை ஏற்க வேண்டியே இருக்கிறது
அந்த வகையில் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் சென்னை பேட்மிண்ட்டன் அணியை வாங்கி, அதற்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
அணியில் உள்ள வீரர்,வீராங்கனைகளை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசினார்.
“சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாலும்,என் தந்தையின் ஆதரவாலும் இந்த அணியை வாங்கியுள்ளேன்.இந்த அணியில் நிறைய இளம் வீரர்களும்,குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடிய ஹைதராபாத் வீராங்கனை பி.வி.சிந்து சென்னை அணிக்காக விளையாடுவது எங்கள் அணிக்கு பலம்.
மேலும் சிக்கி ரெட்டி (Sikkireddy), ஜெர்ரி சோப்ரா (Jerrychopra), கிருஷ்ண ப்ரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன் சன்டோசோ Simon santoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ் ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோரும் உள்ளனர்
மேலும் கங்குலி பிரசாத் பயிற்சியாளராய் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் . எங்கள் அணியின் அம்பாசஸிடராக வளர்ந்து வரும் இளம் நாயகனும் எனது தம்பியுமான ஷண்முக பாண்டியன் உள்ளார். எனது சகோதரர் என்பதால் சண்முக பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடர்க்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரை தேர்வுசெய்துள்ளனர்.
சென்னை அணியின் லோகோவில் சிங்கமுகத்தை வைத்துளேன் . காரணம் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன்.
இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி இல்லாததால், அந்த அணியை ஞாபகபடுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம். மஞ்சள் நிற உடை வைத்ததற்கும் இதுவே காரணம் .
மேலும் சென்னை கிரிக்கெட் அணிக்கு ”விசில் போடு”, சென்னை புட்பால் அணிக்கு ”சுத்தி போடு” என்ற முழக்கம் இருப்பது போல,
சென்னை பாட்மிண்ட்டன் அணிக்கு ”ஸ்மாஷர்ஸ் போடு” என்ற முழக்கத்தை வைத்துள்ளோம் ” என்று கூறினர்.