சென்னையில் ஒரு நாள் 2 @ விமர்சனம்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி கே ராம் மோகன் தயாரிக்க, சரத்குமார், நெப்போலியன் , சுகாசினி , முனீஸ் காந்த், அஞ்சனா பிரேம் , அஜய் , பேபி சாதன்யா நடிப்பில் 

மர்மக் கதை மன்னன் ராஜேஷ்குமாரின்  கதைக்கு , திரைக்கதை எழுதி ஜேப்பியார் என்பவர் (ம்ஹும் ! அவரு இல்லீங்க .)  இயக்கி இருக்கும் படம் சென்னையில் ஒரு நாள் 2 
 
கோவையில் பணியில் சேரும்  உயர் போலீஸ்  அதிகாரி ஒருவருக்கு (சரத்குமார் ), ஒரு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது . 
 
ஏஞ்சலின் மரணம் இன்றா நாளையா என்று எழுதப்பட்டு ஊர் முழுக்க ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரின்  பின்னணியை விசாரிக்கும் வழக்கு அது .
 
துணைக்கு ஒரு அதிகாரி (முனீஸ் காந்த்)
 
உயர் போலீஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளுக்கும் டாக்டர் ஒருவரின் மகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது .
 
வளர்ப்பு மகளுக்கு ஒரு தோழன் . உயர் அதிகாரிக்கு  ஓர் இளைய மகள் ஆகியோரும்  உண்டு 
 
வழக்கை விசாரிக்கும் பொருட்டு ஒரு மன நல மருத்துவமனைக்கு போகிறார் அதிகாரி . அங்கே ஒரு பெண் தற்கொலை செய்து  கொண்ட நிலையில் அவள் உடலை பார்க்கிறார். 
 
அந்தப் பெண் , திருமணம் நிச்சயிக்கப்பட்ட வளர்ப்பு மகளின் நண்பனின் காதலி என்பது தெரிய வருகிறது . 
 
இந்த நிலையில் கொலைக்கரம் ஒன்று வளர்ப்பு மகளை நோக்கி நீள்கிறது 
 
அந்த கொலைக்கரம் யார் என்பதில் ஓர் அதிர்ச்சி . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சென்னையில் ஒரு நாள் 2 . 
 
குற்றவாளியை  ஆரம்பத்தில் ஒரு குளோசப் கூட வைக்காமல் காட்சிப் படுத்தி கதைக்குள் கொண்டு வந்து, கடைசியில் விளக்கும் டைரக்ஷன் உத்தி அருமை . 
 
மன நோயாளிகள் உள்ள கட்டிடத்தை நோக்கி போலீஸ் அதிகாரியும் மன நல மருத்துவரும்  (சுகாசினி) நடக்கும், 
 
அந்த காட்சியின் படமாக்கல் பிரம்மாதம் .  ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் , இயக்குனர் ஜேப்பியாரும் பாராட்டுப் பெறுகிறார்கள் . 
 
மற்றபடி பாராட்ட ஒன்றும் இல்லை . 
 
ஒவ்வொரு காட்சியும்   பல ஷாட்களும்  அளவுக்கும்  மீறி நீள்கிறது . போஸ்டர் ஓட்டுவதை எவ்வளவு நேரம் காட்டுவீங்க ?.
 
அதான் நூறு நிமிட படம் மூணு மணி நேர படம் போல தோன்றுகிறது . 
 
அதுவும் அந்த கிளைமாக்ஸ் டம்மி துப்பாக்கி உத்தி எல்லாம் ரொம்ப டம்மியான விஷயம் . 
 
படிக்க சுவையான கதையை பார்க்கச் சுவையாக எடுக்கத் தவறி இருக்கிறார்கள் . 
 
கோயம்புத்தூரில் நடக்கும் கதைக்கு  சென்னையில் ஒரு நாள் 2 என்ற பெயர் எதுக்கு ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *